பக்கம்:தரும தீபிகை 5.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1900 த ரும தி பி ைக பின் மக்கள் யாவரும் மிக்க துயரங்களை அடைந்து வருந்துவர். இது நீதிக் காப்பின் கிலைமையை உணர்த்துகின்றது. உலகில் நிலவும் உயிரினங்கள் பசித் துயரோடு பிறந்திருக் கின்றன. அந்தப் பசி தீர உணவு தேவை; அவ்வுணவுகள் பயிர் களிலிருந்து விளைந்து வருகின்றன. அவ் விளை பயிர்கள் மழையி ல்ை உயர்ந்து மலர்ந்து பலன் தருகின்றன. ஆகவே, வான மழையும் மண்ணின் விளைவும் மன்னுயிர்க்கு இன்னமிர்கங்க ளாப் ஈண்டு எண்ண சேர்ந்தன. --- உயிராதாரமான இந்த மழையும் விளைவும் வளமாக வாய்ந் திருந்தாலும் அரசன் நெறியோடு தோய்ந்து நிதி புரியானுயின் அங் நாடு பீடையாப்ப் பெருந்துயரங்களையே அடையும். நெல் இருந்தாலும் நீர் இருந்தாலும் பொன் இருந்தாலும் பொருள் இருந்தாலும் அரசன் இருந்த முறையாய் ஆளவில்லையாளுல் யாரும் அங்கே அமைதியாய் வாழமுடியாது; ஆகலால் அவனது ஆட்சியும் காட்டின் காட்சியும் இங்கு நன்கு காண வந்தன. வான்கோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி (குறள், 542) உலகம் மழையால் வாழும்: குடிகள் அரசனது நீதியால் வாழும் எனத் தேவர் இங்கனம் உரைத்திருக்கிருர். பொது வாழ்வும் சிறப்பு வாழ்வும் ஒருங்கே குறிக்கப்பட்டன. கோல் = செங் கோல். யாண்டும் கோடாமல் எவ்வழியும் செம்மையான நேர் மையோடு நீதி புரிவேன் என்பதற்கு அடையாளமாகவே செவ் விய ஒரு கோலை மன்னன் கையில் மாண்பா ஏந்தி யிருக்கிருன். அரசனது உள்ளம் செம்மையாய் ஆட்சி புரியின் அவன் செங்கோலன் ஆகிருன். அவ்வாறு ஆயின் அதிசய மேன்மைகள் அவனிடம் பெருகி வருகின்றன. கரும தேவதை உரிமையா உதவி புரிகின்றது. கருதியபடி காரியங்கள் கை கூடுகின்றன. ■ வேலன் அறு வென்றி தருவது மன்னவன் கோல் அது உம் கோடாது எனின். (குறள், 546) அரசன் திே கோடாமல் செங்கோலன யிருந்தால் வெற்றி புகழ் திரு முதலிய யாவும் அவன்பால் திர ண்டுவரும் என்பது இதல்ை தெரியவந்தது. நீதிமுறையால் அரியபலமகிமைகள் விளைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/361&oldid=1326927" இலிருந்து மீள்விக்கப்பட்டது