பக்கம்:தரும தீபிகை 5.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ ர சு 1901 மழைவளம் சுரக்கு மாறும், வயல்கிலம் விளேயு மாஅலும், விழையறம் வளருமாறும், வேத நூல் விளங்குமா.அம், தழைபொருள் ஈட்டுமாறும், சமரிடை வெல்லுமா.அறம், பிழைதப வாழு மாறும், பிறழ்தராக் கோலின் ஆகும். - i. (விநாயகபுராணம்) செங்கோலால் விளையும் விளைவுகளை இது நன்கு விளக்கியுளது. எங்கும் எ வ்வுயிர்க்கும் யாதும் பங்கம் நேராமல் எவ்வழி யும் செவ்வையாய் நீதி செலுத்துவேன் என்பதற்கு அறிகுறி யாகத் தன் கையில் செங்கோல் காங்கியுள்ள மன்னன் நிலை தவறிப் பிழை செய்ய நேர்ந்தால் உலகம் பல வகையிலும் அல்லலுழந்து அலமரலடைந்து யாண்டும் அவலமுற நேரும். துயர் உண்ண உயிர் உளையும் என்றது துன்பங்கள் சூழ்ந்து தின்ன மக்கள் துடித்து வருந்துவர் என அவரது வாழ்வின் பரிதாப நிலை தெரிய வந்தது. வேந்தன் வெய்யனயின் வைய மாந்தர் ஐயோ என்று அலமர லுறுதலால் இருவர் நிலைமையும் ஒருமுகமா யுணர நேர்ந்தது. அரசன் முறையோடு காவானுயின் வேலி இழந்த பயிர் போல் குடிகள் நிலைகுலைந்து துறைதோறும் துயரங்களையே அடைவர். கன் கடமையை உணர்ந்து முறை புரிந்து அரசன் நாடு காத்து வந்தால் தாய் கைப்பிள்ளைபோல் மக்கள் யாண்டும் மகிழ்ந்து வாழ்வார்; அவன் மடமையாய் மாறுபட்டிருப்பின் பேய்வாய்ப் பிள்ளைபோல் அச்சமும் திகிலும் மண்டி எவ்வழி பும் மாந்தர் வெவ்விய துயரங்களோடு வெருவி உழலுவர். இனிய ஆதாரமா யுள்ளவன் கொடியனுகவே நெடிய துன்பங் கள் நீண்டு நின்றன. கிறந்தலே மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின் இறந்தலை பெருகு நீர்வாழ் உயிர்க்கு இடர் எல்லே யுண்டோ? மறந்தலே மயங்கு செவ்வேல் மன்னவன் வெய்யன் ஆயின் அறந்தலை மயங்கி வையம் அரும்படர் உழக்கும் அன்றே. (1) மண்குளிர் கொள்ளக் காக்கும் மரபுஒழிந்து அரசர் தங்கள் விண்குளிர் கொள்ள ஒங்கும் வெண்குடை வெதும்புமாயின் கண்குளிர் கொள்ளப் பூக்கும் கடிகயத் தடமும் காவும் . தண்குளிர் கொள்ளு மேனும் தான்மிக வெதும்பு மன்றே. (3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/362&oldid=1326928" இலிருந்து மீள்விக்கப்பட்டது