பக்கம்:தரும தீபிகை 5.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அ ர சு 1905 பாதுகாத்து வருவது அரசுக்கு உரிய கருமமாய் அமைந்து கின் றது. அரசர் தெய்வத் திருவருள் பெற்று வருபவர் ஆதலால் தரும நீதிகளைப் பேனுவது இயல்பான கருமமா யிசைந்தது. பரித்ராணுய ஸாதுாநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்மஸம்ஸ்தாபகார்த்தாய லம்பவாமி யுகே யுகே. (கிதை, 4-8) கல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், கருமங்களை கிலை கிறுத்தவும் யுகம் தோறும் கான் அவதரிக்கிறேன்” எனக் கண்ணன் இவ்வாறு கூறியிருக்கிருர். காவல் தெய்வமான திரு மாலின் அமிசமாய் வருகிற அரசரும் இக்கருமங்களைச் செய்ய வுரிமையா யுள்ளனர். அறம் கலைநிறுத்துவதே சிறந்த அரசாம். அறந்தலை நிறுத்தி வேதம் அருள்சுரந்து அறைந்த திேத் திறந்தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தியோர் இறந்துக நாறித் தக்கோர் இடர் அடைத்து ஏக விண்டு பிறந்தனன் தன்பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான். (இராமா, சுந்தர, பிணிவிட்டு, 81) இயோரை இறந்துக நூறி, நல்லோரைப் புரந்தருளி, கரும நீதி கள் உலகில் உயர்ந்து வர இராமன் பிறந்து வந்துள்ளான் என இராவணன் எதிரே அனுமான் இவ்வாறு செவ்வையாக உணர்த் தியுள்ளான். தரும வீரனது கரும வீரம் காண வந்தது. நன்மை வளர்ந்து வரத் தீமை தளர்ந்து ஒழியச் செம்மை யாக அரசு புரிந்து வருபவரே செங்கோல் மன்னராய்ச் சிறந்து வருகிரு.ர். விக்கிரமார்க்கன் ஆட்சியில் கல்லோர் யாண்டும் உயர்ந்து வாழ்ந்தனர்; தியோர் எங்கும் மங்கி மாய்க்தனர் என அவனது பரிபாலன முறையை உலகம் உவந்து பாராட்டி யுள்ளது. மேல் நாட்டாரும் வியக் து புகழ்ந்திருக்கின்றனர். “Vikramarka, punishing the wicked and protecting the good, reigned over the kingdom.” :தியவர்களைத் தண்டித்து ஒடுக்கி நல்லவர்களைப் பாதுகாத்து நாடு முழுவதையும் விக்கிர மார்க்கன் நன்கு ஆண்டு வந்தான் , என அம்மன்னது ஆட்சி நிலையைக் குறித்து மறுபுலத்தவரும் இன்னவாறு மாட்சியோடு மகிழ்ந்து போற்றி யிருக்கின்றனர். 239

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/366&oldid=1326932" இலிருந்து மீள்விக்கப்பட்டது