பக்கம்:தரும தீபிகை 5.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ சு 1907 மாதவர் கோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனின் இன்ருல்; மகனே முறைசெய்த மன்னவன் வழிஓர் துயர்வினே யாளன் தோன்றினன் என்பது வேந்தர் தம்செவி உறுவதன் முன்னம் ஈங்கு இவன் தன்னேயும் ஈமத்து ஏற்றி' (மணிமேகலை, 22) நான் செய்யவேண்டிய தண்டனையை விஞ்சையன் செய்தான்; ஒரு பசுவின் கன்றுக்காகக் கன் மகனைக் கொன்று நீதி முறை செய்த அங்க உத்தம அரச மரபிலே இப்படி ஒரு தோன புத்தி ரன் தோன்றினனே! என்று உலகம் இகழ்ந்து பழிக்கு முன் இவனைச் சுட்டுத் தொலையுங்கள் என வேங்கன் திே கிலேயோடு நெஞ்சம் துணிந்து உரைத்திருப்பது உள்ளத்தை உருக்குகிறது. கற்பும் தவமும் காவலன் காவலால் நிலைத்து வருகின்றன. நல்ல தன்மைகளை நன்கு பேணிப் பொல்லாத புன்மைகளைப் பொன்ற ஒழித்து எங்கும் எவ்வழியும் செவ்விய நீதியைச் செப்து வருவதே திவ்விய அரசரது கடமையாம் என்பதை இக் காவலன் காட்டித் தனது பரிபாலனமுறையை விளக்கியுளான். பெற்றபிள்ளை யானுலும் குற்றம் செய்தால் அவனைத் தண் டித்து அடக்கி மற்றவரைப் பேணி வருவதே வெற்றி வேங்காது நீர்மையாம் என்பது ஈண்டு விளங்கி கின்றது. நல்லவை நாளும் தழைத்து வர அல்லவை யாவும் அழிந்து ஒழிய ஒல்லும் வாயெல் லாம்.அரசன் ஒர்க் து தேர்ந்து உறுதியா வினை செய்யவேண்டும். கான்பூலியஸ் (Confucius) என்னும் சீன தேசத்துப் பெரி யார் அரசுக்கு உரிய கடமைகளைக் குறித்து வரும்பொழுது ஈல் லோரைக் காக்கவேண்டிய முறையை நன்கு உணர்த்தியுள்ளார். அவருடைய போதனைகளை மேல் காட்டு அறிஞரும் உவந்து போற்றி ஆட்சியாளர் எதிரே காட்சியாக் காட்டியுள்ளனர். “Put a stop to false accusations, in order to protect the honest and the good-” (E. C.) 'கண்ணியமான நல்லவர்களைக் காக்கும் பொருட்டுப் புல் லிய தீமையாளரை நீக்கியருள்' என்னும் இது இங்கே நோக்க வுரியது. உத்தமர் பெருகி வர உறுதி புரிவதே தரும நீதியாம். == கரு - க l

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/368&oldid=1326934" இலிருந்து மீள்விக்கப்பட்டது