பக்கம்:தரும தீபிகை 5.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1910 த ரு ம தி பி கை திேயாய் நேரே முறைமை செய்து வரின் இறைமை எவ்வழியும் உரிமையாய் ஒங்கி வரும்;அது தவறினல் யாண்டும் அவகேடே யாம். செங்கோல் சீவன், வெங்கோல் சாவு என்ற கல்ை அரச லுடைய வாழ்வும் வீழ்வும் நன்கு அறியலாகும். முறைமைமுட்டாது செய்து முழுகிலம் காப்பின் அந்த இறைவனைச் செங்கோல்காக்கும் எளிய செவ்வியனும் ஆகான், குறைவளர் குற்றம் ஒரான் குணத்தொடு முறை செய்யானே கிறைதரு பாவம் தேய்க்கும் கெடும்பகை இன்ரு மேனும். (விகாயகபுராணம்) சேங்கோலனப் முறை புரிந்து வரின் அந்த அரசன் கிறை திரு வுடன் நெடிது வாழுவான்; நிலை தவறிக் கொடுமை புரிய கேரின் அவன் அடியோடு அழிவான் என இது தெளிவா விளக்கியுளது. கோடுங்கோலன் கடுங்காலன் என்னும் பழமொழியால் அரசன் கொடியன் ஆல்ை குடிகள் நெடிய துயரம் அடைவர் என்பது தெரிய வந்தது. நீர்மைகொலேயவே நிலைமைதொலைந்தது. உலகமக்களை இனிது பேணி வரும்படி உரிமையாப் வங் தவன் கொடுமையாப்மாறின் அவனுடைய அழிவு கடுமையாய் நிகழ்ந்து விடும். தன் அழிவுக்குத் தனது இழிவே காரணமாம். “Tryanny hath been - The untimely emptying of the happy throne And fall of many kings.” (Shakespeare) "தங்கள் அரிய இனிய அரியணையிலிருந்து விரைந்து தள்ளி அநேக அரசர்களைக் கொடுங்கோல் கடுமையா அழித்திருக்கி றது” என்னும் இது இங்கே நுனித்து உணர வுரியது. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃதின்றேல் மன்னவாம் மன்னர்க்கு ஒளி. (குறள், 556) அரசர்க்குப் புகழும் பொருளும் செங்கோலால் உளவாம்; அது வழுவின் பழியும் அழிவும் விளையும் என இது உணர்த்தியுளது. அரச பதவி அரிய பெரிய நிலை; அக்க உயர்க்க தலைமை யைப் பெற்றவர் தமது நிலைமையை உணர்ந்து எவ்வழியும் கட ! . மையைக் கண்ணுான்றிச் செய்து செவ்வியராய் ஒழுகி வர வேண்டும்; அது அவர்க்கு அரிய பல மகிமைகளை அருளி வரும். == o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/371&oldid=1326937" இலிருந்து மீள்விக்கப்பட்டது