பக்கம்:தரும தீபிகை 5.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ ர சு 1909 கூறியுள்ளார். மழையோடு சேர் வைத்து மன்னனுடைய நீர் மையை விளக்கி யிருக்கும் சீர்மை உன்னி யுணரவுரியது. பிள்ளைகள்பால் உள்ளம் உருகி உரிமை செய்து வரும் தாப்போல் குடிமக்கள்பால் அருள் புரிந்து அரசன் ஆதரவு செய்ய வேண்டும்; அவ்வாறு செய்து வரும் அளவே அரசும் குடியும் வரிசையாய் வளம் சுரந்து வரும்; இந்த அருளைச் செய்யாது மாறின் அந்த அரசு பொலிவிழந்து நலிவடைந்து தொலையும். குடிக்கு அளி புரியின் முடிக்கு ஒளி புரிகின்றது. அருள் இல்லாத அரசை ஒளி இல்லாத கண் என்றது கிலே மையை எண்ணியுணர வந்தது. கண் உருவமா யிருந்தாலும் உள்ளே ஒளி இல்லையானல் அது விழி குருடாப் இழி பழியே அடையும்; அதுபோல் செல்வம் முதலிய நிலைகளால் அரசன் வெளியே பெருமையா யிருந்தாலும் அகத்தே அருள் இல்லையா ல்ை கொடியவன் என்று வையம் அவனை வைது தள்ளும். அரசு முறை கருதி நீதிநெறி ஒழுகி நாட்டை நன்கு பாது காத்துவரின் அந்த அரசனே யாவரும் உவந்து புகழ்ந்து உரிமை கூர்ந்து போற்றி வருவர்; தருமமும் அவனிடம் பெருகி வரும் ஆதலால் உயர் தலைமையுடையனப் ஒளி பெற்று விளங்குவன். நீதி நெறியில் கிலேத்துவரும் நீதிமான் ஆதி அருளே அடைகின்றன்.--திேநெறி பேணு திழிந்து பிழைபுரியின் பேதையாய் வீன யழிவன் விரைந்து. அரசன் நெறி முறை தழுவி நீதிமானப் நின்ருல் ஆதி முதல்வ லுடைய அருளே அடைந்து யாண்டும் நீண்ட பெருமை பெறு வான்; அவ்வாறின்றி நெறி கேடனப் முறை பிறழ்ந்தால் பரிகா பமா யிழிந்து அவன் பாழ்படுவான் என இது உணர்த்தியுள் ளது. அரசு பாழாகாமல் பாதுகாப்பது நீதிமுறையே யாம். உயர்ந்த நிலையில் சிறந்து நிற்கின்ற அரசன் தனது கடமை யை ஈன்கு உணர்ந்து எவ்வழியும் செவ்வையாய் ஒழுகி வர வேண்டும்; தான் சிறிது வழுவினல் உலகம் பெரிதும் வருந்திப் பிழைபட நேரும்; கோவே பழியும் பாவமும் அடைந்து அவன் அழிவுற சேர்வான். அழிவு நேராமல் தொழில் புரிவதே அறிவrம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/370&oldid=1326936" இலிருந்து மீள்விக்கப்பட்டது