பக்கம்:தரும தீபிகை 5.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1918 தரும தீ பிகை மன்னன் தெளிந்த மதிமான யிருக்கவேண்டும் என இது மொழிந்துள்ளது. அறிவுடைய அரசன், நீதி நால், சூரியன் ஆகிய மூன்றும் உலகங்களுக்கு ஒளிபுரியும் விழிகளாம். இவற் அறுள் முதன்மையாயுள்ள அந்த விழி தகுதியா யில்லையாயின் மற்ற இரண்டு கண்களாலும் பயன் இலவாம் என இது குறித் திருக்கிறது. குறிப்பு நிலை கூர்ந்து ஒர்ந்து சிக்திக்கத் தக்கது. சூரியன் இருளை நீக்கி ஒளியைப் பரப்பி உலக வுயிர்கள் தெளிவடைந்து உயர்ந்து வாழச் செய்கிருன்; அரசனும் அவ் வாறே செவ்வையாகச் செய்து வருகிருன். பகைமை வறுமை மடமை முதலிய இடர்களே நீக்கித் தனது குடிசனங்கள் எவ் வழியும் சுகமாய் வாழ்த்துவரச் செய்வதே அரசனுடைய கட மையாய் அமைந்திருக்கிறது. பிறப்புரிமையாய்த் தனக்கு அமைந்துள்ள சிறப்பு நிலையை உணர்ந்து ஆட்சிபுரிய வுரிய அரசனுக்கு அறிவுக் காட்சி எவ்வளவு தேவையா யுள்ளது என் பதை எளிதே தெளிந்து இனிது உணர்ந்து கொள்ளலாம். பகலும் இரவும் சூரிய சந்திரர்களால் ஒளி பெறுகின்றன; அந்த இரு பொழுதையும் ஒருங்கே மருவியுள்ள உலகம் அரச ஞல் தெளிவடைந்து உயர்ந்து வருகிறது. ஆகவே கதிரும் மதி யும்போல் ஒளிமிகுந்து மன்னன் அதிசய நிலையில் நிலவி நிற்கின் முன். வேந்தன் அறிவு மாக்கருக்கு மகிழ்ச்சி புரிக் து வருகிறது தண்கதிர் மதியம் போலவும் தெஅசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும் - -- மன்னிய பெருமநீ நிலமிசை யானே.” (புறம் 6) பாண்டிய மன்னனை நோக்கிக் காரிகிழார் என்னும் சங்கப்புலவர் இங்ஙனம் பாடியிருக்கிருர். கவியின் கருத்தைக் கருதி நோக்கி உறுதி கில்ேகளைக் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். 762 கலைகள் பலவும் கருதிப் பயின்று உலக நிலைகள் உணர்ந்து-தலைமையுடன் வேந்து வினைபுரியின் மேலான நன்மைகளை மாந்தர் அடைவர் மகிழ்ந்து. * . (உ) இகள். அரசன் பலகலைகளையும் பயின்று தெளிந்து உலக நிலைகளை ஒர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/379&oldid=1326946" இலிருந்து மீள்விக்கப்பட்டது