பக்கம்:தரும தீபிகை 5.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு 1917 மாயப் மருவி வாழ்கின்ற குடிசனங்களை இனிது பேணி வர வுரிய னப் அரசன் தனியமைந்துள்ளமையால் அறிவும் ஆண்மையும் நெறியும் நீர்மையும் அவனுக்கு அரிய பல மேன்மைகளை அருளி வருகின்றன. ஆட்சி நிலை அவன் காத்து வருகிற சீரிய காரிய முறையால் மாட்சி மிகுந்து நீட்சியடைந்து வருகிறது. விரிந்து பரந்துள்ள உலக நிலைகளை நன்கு தெரிந்துகொள்ள வேண்டியவளுப் வேங்கன் உயர்ந்து கிற்கிருன். எல்லாம் அறிய வல்ல கடவுளைப்போல் அவனும் ஒரளவு அறிந்து வங்க போது தான் சிறந்த நீதி முறைகளை விரைந்து செய்ய முடியும். தெப் வத்தின் பிரதிநிதியாய் அரசன் வையத்தில் வாய்ந்திருக்கலால் எதையும் ஒர்ந்து உணர்த்து கூர்ந்த வினை செய்கிருன், அந்த வினைமாட்சி அறிவுக் காட்சியால் தெளிவாய் ஒளி பெற்று வருகிறது. டிரிய அறிவு அரிய பலசெயல்களே ஆக்கியருளுகிறது. எல்லாம் அறியும் இறைவன் போல் மன்னனும் எல்லார் கிலேயும் எதிர்அறிந்து-ஒல்லையினில் நீதி முறைபுரியும் நீர்மையய்ை கின் ருனேல் ஆதி மனுவே அவன். முழுவதும் அறியும் முழுமுதல் பரமன் போல் அரசனும் வழி முறைகளைக் தெளிவாக அறிந்து விழுமிய நீதிகளை விரைந்து புரிய வேண்டும் என இது விளக்கியுள்ளது. தனிமுதல் அரசு என்று கடவுளை உரிமையோடு கூறி வருகலால் அ0 சுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவுரிமையை உணர்ந்து கொள்ளுகிருேம். “God is king of all kings.” 'அரசர் எல்லாருக்கும் கடவுள் முதல் அரசன்' என மேல் நாட்டாரும் இவ்வாறு கூறியிருக்கின்ருர். எங்காடும் அரசைப் பெருமையா மதித்துப் போற்றி வந்துள்ளது. பல உயிர்களைப் பாதுகாக்க சேர்க்க அரசனிடம் கலைமையான அறிவு சேர்ந்த அளவு கான் அவன் நிலை உயர்ந்து திகழ்கின்ருன். ஆதவன் ஒளி அகில வுலகங்களுக்கும் தெளிவருளுகின்றது. அதுபோல் அசன் அறிவு அவன் தேசத்துக்கு இதமாய் ஒளி புரிந்து வருகிறது. தெளிவான மதி எவ்வழியும் அளி புரிகிறது. தெருண்ட சிந்தனை மன்னவன், நீதிநூல், திசையின் உருண்ட தேரினன் என்னும் மூவிழிகள் உண்டு உலகின்; மருண்டு மன்னனும் விழிஒளி மறைந்திடின் மற்றை இரண்டு கண்ணினும் பயன் இலே ஆகுமே என்ருன்..(செவ்வந்தி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/378&oldid=1326945" இலிருந்து மீள்விக்கப்பட்டது