பக்கம்:தரும தீபிகை 5.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபத்தேழாவது அதிகாரம். அ றி வு அஃதாவது உலக நிலைகளையும் கலைகளையும் ஒர்ந்து தெளியும் உணர்வு. நாடு ஆளும் அரசன் மேலான அறிவாளனப் இருக்க வேண்டும் என உணர்த்துகின்றமையால் அரசின் பின் இது வைக்கப்பட்டது. அரச அறிவு வரிசையாய் அறிய வந்தது 771 மன்னன் அறிவு மதிகதிரின் இன்னெளிபோல் மன்னுயிர்க் கெல்லாம் மகிழ்தரலால்-அன்னவன் தெள்ளியனய் கின்று செயல்புரியும் அவ்வளவே ஒள்ளிய தாகும் உலகு. (க) இ-ள். அரசனுடைய அறிவு சூரிய சந்திரர்களுடைய ஒளிபோல் எல்லா உயிர் இனங்களுக்கும் ஒருங்கே ஒளிபுரிந்து உதவி வருகிறது; ஆகவே அவன் தெளிந்த மதிமானப் நின்று செயல் புரியும் அளவே உலகம் ஒளிமிகுந்து உயர்ந்து விளங்கும் என்க. இது மன்னன் மதியின் மகிமை கூறுகின்றது அறிவு ஆன்ம ஒளியாய் மேன்மை மிகுந்து மனிதனை மகிமைப் படுத்தி வருகிறது. மிருகம் பறவை முதலிய பிராணிகளைவிட மனிதன் உயர்ந்து நிற்பதற்கு மூலகாரணம் அறிவே. மனதை ஒருமுகப்படுத்திச் சிக்திக்கவும், நன்மை தீமைகளை நாடி அறிய வும், எதையும் தருவி உணரவும், தான் உணர்ந்து துணிக்கதிைக் காரியத்தில் கருதிச் செய்யவும் மனிதன் வல்லவனுயிருத்தலால் எல்லா வகையிலும் மேலானவனுய் அவன் விளங்கி நிற்கின்ருன். இத்தகைய அறிவு அரசனிடம் உத்தம நிலையில் உயர்ந்து வித்தக விளைவாப் வியன் பயன் புரிந்து வருகிறது. உலகத்தை நன்கு பாதுகாத்து மனித சமுதாயத்தை இனிது நடத்திவர வுரியவன் ஆதலால் அரசன் பெரிய அறிவாளியா யிருக்கவேண் டும். அரிய பல பொறுப்புகள் அவன் மேல் அமைந்துள்ளன. ஒரு நாட்டில் பல வகையான மக்கள் பரவியுள்ளனர். சாதி மதம் தொழில் முதலிய நிலைகளால் பிரிவடைந்து ஒரு முக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/377&oldid=1326944" இலிருந்து மீள்விக்கப்பட்டது