பக்கம்:தரும தீபிகை 5.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1594 த ரும தீபிகை பொருள் மேல் அளவு மீறி வைத்துள்ள ஆசையே உலோ பம் என வந்தமையால் அதனையுடையவன் உலோபி என நேர்ந் தான். ஈன இயல்பு மனிதனை ஈனன் ஆக்கி விடுகின்றது. பணப்பித்து பழிப்பத்து என்னும் பழமொழியால் உலோபத் கால் விளையும் இழிவும் பழியும் ஈனமும் அறியலாகும். பொருளால் அடையவுரிய நல்ல உறுதி நலங்களையெல்லாம் இழந்து இழிந்து போதலால் உலோபியின் பிறப்பும் இருப்பும் பழிப்புலேகளாய்ப் பாழ்பட்டு நின்றன. உண்மையுணராத ஊன த்தால் புன்மைகள் படிந்து புலேயுறுகின்றனர். அருளை வளர்த்துப் பொருளின் பயனைப் பெரியோர் அடைந்து கொள்ளுகின்றனர்: சிறியோர் மருளராய் மறுகி வறிதே மடிகின்றனர். -- பொருளில் மருள் கொண்ட கசையால் உள்ளம் இருள் மண்டி ஈனமடைந்தது; அடையவே யாவும் அவலமாயின. நல்ல நிலைகளை நாசப்படுத்தி மனிதனை உலோபம் சேமாக்கி விடுதலால் அது கொடிய புலையாய்க் கடியகின்றது. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று. (குறள் ,438] 'இழிக்க எந்தக்குற்றங்களோடும் உலோபத்தை இணைத்து வைத்து எண்ணலாகாது; அது மிகவும் ஈனமானது'எனத்தேவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். பற்றுள்ளம், இவறன்மை என உலோபத்திற்குப் பெயர் இட்டிருக்கும் குறிப்புகள் கூர்ந்து சிந்திக்கத்தக்கன. பொருளை உபயோகமாக உரிமையோடுவிடவேண்டிய இடத்தும் விடாமல் இறுகப் பற்றிநிற்கும் கொடிய வன்னெஞ்சமே உலோபம் என கெடிது இங்கி நிற்றலால் அது பற்றுள்ளம் என வந்தது. பேரா சையால் மேலும் மேலும் பொருள் மேல் இவர்ந்து நிற்பது இவறன்மை என நேர்ந்தது. இவறல் = கசையால் மேல் ஏறுதல் இந்த ஈனகசை மனிதனை இழி நிலையில் தள்ளிவிடுதலால் உலோபம் கழி நெடுக் தீமையாய்ப் பழிபடர்ந்து கின்றது. பொறுமை முதலிய நல்ல குணங்கள் பல மருவியிருந்தாலும் உலோபியிடம் அவை சிறுமையாகவே எண்ணப்படும். சின மும் சீற்றமும் இன்றி அவன் அமைதியாய் அடங்கியிருப்பினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/55&oldid=1326612" இலிருந்து மீள்விக்கப்பட்டது