பக்கம்:தரும தீபிகை 5.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்தெட்டாம் அதிகாரம். உலோபம். அஃதாவது இரங்கி ஈயாக தீய இயல்பு. பொருளாசை மண்டி மருள் கொண்டு நிற்கும் மடமையான உலோபம் கொடுமையாய் நிமிர்தலால் அதன்பின் இது வைக்கப்பட்டது. 671. ஏதேனும் ஒர்பொருளை ஈஎன் றெவரேனும் தாதா எனகினைந்து சார்வரேல்-மீதோடிக் கொல்லவரும் காய்போல் கொதித்துக் குலேக்குமே நல்ல உலோபமெனும் காய். (க) - இ-ள் பொருளுடையான் ஏதேனும் அருளுவான் என்று கரு எவரேனும் வந்து ஈ என்று நெருங்கினல் உலோபம் என்னும் நாய் துள்ளி எழுந்து துடுக்காய்க் கொதித்துக் குலைத்துக் கடிக்க வரும் என்பதாம். இது, பொருளின் மருளாளனை உணர்த்துகின்றது. குணம் குற்றம் எ ன்னும் இருவகையான தொகைகள் வேர்களை மருவி நிற்கின்றன. குணத்தால் புகழும் புண்ணியமும் இன்பமும் வருகின்றன. குற்றத்தால் பழியும் பாவமும் துன்ப மும் விரிகின்றன. ஈகை நல்ல குணம், அதனையுடையவன் பல வகையிலும் உயர்ந்து தலைமை எய்தி நிற்கின்றன். உலோபம் கெட்ட குற்றம். கன்னேயுடையானைச் சின்ன மனிதனுக்கிச் சீர ழித்து விடுதலால் தீய இழிவு என அது தீர்ந்து நின்றது. உலோபம் என்பது பொருள் மேல் கடும் பற்றுக்கொண்டு வெறிமண்டி நிற்கும் மருள். இந்த மருளுடையவன் அருள் அறம் முதலிய உயர்கலங்களை யெல்லாம் ஒருங்கே இழந்து இழிந்து போகின்ருன். உயர்ந்த பொருள் கையில் இருந்தும் இழிந்த மனப் புன்மையால் மனிதன் ஈனமடைந்து போவது ஞான சூனியமான ஒர் பரிதாபமாயுள்ளது. ஈகையாளன் அரியபல மகிமைகளை எய்தி உயர்ந்து போ கின்ருன், உலோபி கொடிய பல சிறுமைகளை அடைந்து இழிந்து விழ்கின்ருன். இழி விழ்வு பழி துயரமா கிறது. 200

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/54&oldid=1326611" இலிருந்து மீள்விக்கப்பட்டது