பக்கம்:தரும தீபிகை 5.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1592 த ரும தீ பி. கை க்து வருக்தி அழுத்துவான் என இது குறித்துள்ளது. தன்னைப் போல் பிறரை எண்ணி ஒழுகுபவன் நீதிமான் ஆகின்ருன். அவ்வாறு கருதாமல் அவகேடு செய்பவன் அநீதி யாளய்ை அவலமடைகின்றன். கரும நீதியைக் கடந்தபோது தான் மனிதன் பாவத் தீமைகளைச் செய்ய நேர்கின்ருன். Where law ends, tyranny begins. (Johnson) 'நீதி எங்கே விலகுகிறதோ அங்கே கொடுமை விளைகிறது: என்னும் இது இங்கே அறிய வுரியது. தன் உயிர்க்கு இகத்தை நாடும் இயல்பினன் பிறவுயிர்க்கு அகிதத்தைச் செய்ய முயல் வது அகியாயமாயது; ஆகவே அதன் பலனை அனுபவிக்கிருன். கொடுமையால் பாவம் விளைகிறது; அதனுல் வறுமை முத லிய துயரங்கள் வந்து உயிர்களை வாட்டி வருத்துகின்றன. உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி எண்ணம் பழுதாப் இழிந்துமே-வண்ணம் குலைந்து திரியும் கொடுமை கினேயின் உலேந்து குலையும் உளம். இதனை கினைந்து நெஞ்சம் இரங்கி வாழுக. கொடிய தீமைகளை மறந்து விடுக. இனிய நீர்மைகள் நிறைந்து உயர்ந்து கொள்ளுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கொடுமை கடுமையான கேடுகள் உடையது. கொடிய விடம் போல் கடிய வுரியது. நெடிய இடர்களை யாண்டும் நீண்டு செய்வது. நச்சுமரமாய் நாசம் தருவது. நீசத்துயர்களை நேரே புரிவத. கரக துன்பத்திற்கு இTதுவானது. கொடியரை யாதும் கூடலாகாது. பழகிய கொடுமை படுபழியாகும். கொடுமை ஒழியின் இனிமை விளையும். இனிய இரக்கம் இன்பநிலையமாம். சுஎவது கொடுமை முற்றிம்அ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/53&oldid=1326610" இலிருந்து மீள்விக்கப்பட்டது