பக்கம்:தரும தீபிகை 5.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. கொ டு ைம 1591 அன்பு இல்லாதவர் தம் உயிர்க்கு இன்பகலன்களை இழந்த வர்; அறிவில்லாப் பிணங்கள் என இதில் குறித்துள்ளதைக் கூர் க்து நோக்குக. நல்ல நீர்மையை இழந்தவன் பொல்லாத புலேக களில் அழுந்திப் பொன்றி ஒழிகின்ருன். கொடுமை போல் மடமை இலே அன்பு செய்ய உரிய அருமைப் பிறவியைச் சிறுமைப் படு க்தித் துன்பமான கோடுமைகளைப் பழகி நிற்பது முழுமூடமே யாம். கனக்கு வருகிற இழிபழியையும் அழிதுயரங்களையும் அறிந்து கொள்ளாமையால் மனிதன் கொடிய செயல்களைச் செய்து அடியோடு கெடுகின்ருன். இனிய நீர்மையாளர் பெரிய மனிதராய்ப் பெருமகிமை பெறுகின்ருர், கொடுமையாளர் சிறுமையாளராய்ச் சீரழிகின் முர். உரிய தகுதி மனிதனே உயர்த்தி யருளுகின்றது; அதனை இழந்து நின்றவன் இழிந்து படுகின்ருன். “Worth makes the man, and want of it the fellow” (Pope) 'அரிய தகுதி பெரிய மனிதன் ஆக்குகிறது, அஃது இல் லாதவன் சிறியவனப் நிற்கிருன்'என்னும் இது இங்கே அறிய வுரியது. இயல்பு இழியவே உயர்வு ஒழிகின்றது. பண்டு செய்த கொடுமையின் விளைவே இன்று அல்லல்களில் அழுக்தி மனிதர் அவலமாயுழலுவதற்குக் காரணமாயமைந்தது. கொடிய வினைப்பயன்கள் அடுதுயரங்களாய் அடர்ந்துள்ளன. தனக்கு இதத்தையே எவ்வழியும் எவனும் விரும்புகின் முன். அவ்வாருன அனுபவமிருந்தும் பிறர்க்கு ஒருவன் இடர் செய்ய கேர்வது முழுமடமையாகின்றது. கான் செய்தது எது வோ அது தனக்கே மாறி வருகிறது. நெருப்புயிர்க் குஆக்கி நோய் செய்யின் கிச்சமும் உருப்புயிர் இருவினே உதைப்ப விழ்ந்தபின் புரிப்புரிக் கொண்டுபோய்ப் பொதிந்து சுட்டிட இருப்புயிர் ஆகிவெந்து எரியுள் விழுமே. (சீவகசிந்தாமணி) பிற வுயிர்கள் வருந்தும்படி கொடுமை செய்தவன் துயரங் களேயே அனுபவித்து இழிபிறவிகளை அடைந்து எரி நரகில் விழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/52&oldid=1326609" இலிருந்து மீள்விக்கப்பட்டது