பக்கம்:தரும தீபிகை 5.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1590 தரும பிேகை இவ்வாறு மாட்சிமை மிகுந்த பிறப்பினை அடைந்தே மணி தன் இங்கு வந்திருக்கிருன். இங்ங்னம் எடுத்து வந்த பிறவி இன்பமுடையதாய் உயர்ந்த தெய்வீக நிலையை அடைய வேண்டு மாயின் இனிய பல பண்பாடுகளைப் பழகி ஒழுக வேண்டும். பண்புகளுள் அன்பு கலை சிறந்தது. தன்னையுடையான உயர்ந்த மனிதனுக்கி என்றும் குன்ருத இன்பநிலையில் உய்த்தருளுதலால் அன்பு சீவ அமுகமாய் மேவியுள்ளது. 'அன்பினுள்ளாகி அமரும் அரும்பொருள் அன்பினுள் ளார்க்கே அணே துணையாமே." (திருமந்திரம்) அன்புக்கும் இறைவனுக்கும் உள்ள உரிமையை இது உண ர்த்தியுள்ளது. உண்மை நிலை ஊன்றி உணர வுரியது. உள்ளம் இரங்கி அருளும் நீர்மையே அன்பு ஆதலால் அதனையுடையவன் எல்லா உயிர்களும் உவந்து போற்றும் மகி மையை எளிதே அடைந்து கொள்ளுகின்ருன். அன்புநலம் ஒன் மே எல்லா இன்பகலங்களுக்கும் மூல காரணமாயுள்ளது. துன்பத் தொடர்புகள் நீங்கி உயிர் இன்பநிலையை அடைய வேண்டின் அன்பைத் தனி உரிமையாக அ.து.அடைய வேண்டும். அன்பு ஒன்றை அடைந்து கொள்ளின் மனிதப்பிறவி துன்பங் களை யெல்லாம் நீங்கி இன்ப நிலையை அடைந்து கொண்டதாம். இங்கனம் தனக்கு உரிமையான இனிய அன்பை இழந்து விடின் அந்த மனித வாழ்வு பயனிழந்து பாழ்படுகின்றது. பிறவு யிர்கள் பால் நன்கு அன்பு செய்யாதவன் தன் உயிர்க்கு என்றும் துன்பத்தையே செய்தவனுகின்ருன். "ஈசனுக்கு அன்பில்லார் அடியவர்க்கு அன்பில்லார்; எவ்வுயிர்க்கும் அன்பில்லார்; தமக்கும் அன்பில்லார்; பேசுவதென் அறிவிலாப் பிணங்களேங்ாம் இணங்கின் பிறப்பினினும் இறப்பினினும் பிணங்கிடுவர்விடுே ஆசையொடும் அரனடியார் அடியாரை அடைந்திட்டு அவர்கருமம் உன்கருமமாகச் செய்து கூசிமொழிந்து அருள்ஞானக் குறியில் கின்று கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித்திரியே. (சிவஞானசித்தியார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/51&oldid=1326608" இலிருந்து மீள்விக்கப்பட்டது