பக்கம்:தரும தீபிகை 5.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. கொ டு ைம 1589 இந்த இரண்டு பாசுர்ங்களும் இங்கே சிந்தனைக்கு உரியன. இராமலிங்கசுவாமிகளுடைய அனுபவ நிலைகளை இவை உணர்த்தி யுள்ளன. அரிய அருள் இரக்கங்கள் அறிய வந்தன. இரக்கமே என் உயிர்; அது இல்லையேல் எனக்கு உயிரில்லை என அந்த அருள்வள்ளல் உரைத்திருப்பது ஊன்றி உணரவுரியது. வேதயை மீதுணர்ந்து உள்ளம் உருகி உயர்ந்தவர் பெரிய மகான்களாயுள்ளனர். நெஞ்சக்கனிவு நேரே பரம நீர்மையை மருவி மிளிர்கிறது. வஞ்சக் கொடுமை வன் துயரமாகிறது. கொடியர் கடையராயிழிந்து ஒழிகின்ருர்; இனிய நீரர் தனி மகிமை அடைந்து இன்ப நிலையில் உயர்கின்ருர். கொடுமை புரிந்து குடிகெடாதே. கருணை புரிந்து கதிகலம் காணுக. தி: 670. அன்புசெய வந்த அரிய பிறவியைத் துன்புசெய ஆக்கித் துயரமாய்-வன்பழியுள் மாயும் கொடுமைபோல் மாநிலத்தில் ஒர்மடமை ஆயும் பொழுதில் இலே. (a)) இ-ள் அன்பு செய்யவே இந்த அரிய மனிதப் பிறவி வந்துள்ளது; இதனைத் துன்ப வழிகளில் செலுத்தித் துயர்புரிந்து பழியடைந்து இழியும் கொடுமைபோல் கொடியமடமை யாதும் இல்லை என்க. இது பிறவிப் பயனே உணர்த்துகின்றது. இந்த உலகில் சீவகோடிகள் பல கோன்றி கின்று மறைந்து போகின்றன. அவற்றுள் மனித உருவில் மருவி வருவது அரிய செயலும் பெரிய பேறுமாய்ப் பெருகியுள்ளது. அறிவு கலங்கள் பல நன்கு அமைந்திருத்தலால் மானிடசன்மம் அதிக மேன்மை யுடையதாய் மேவி நின்றது. எல்லாப் பிராணிகளையும் படைத்த சிருட்டிகர்த்தா மனிதனைப் படைத்த பின்பே மகிழ்ச்சி அடைக் தான்; அதனல் மானிடர் மகிமை தெரிய வந்தது. "ஊனுடம் புடைய உயிர்களேப் படைத்தும் உளமிக மகிழ்ந்திலன் முடிவில் மானுடம் படைத்த பின்னரே மலரோன் மகிழ்ச்சிமீக் கூர்ந்தினிதமர்ந்தான்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/50&oldid=1326607" இலிருந்து மீள்விக்கப்பட்டது