பக்கம்:தரும தீபிகை 5.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1596 தரும தீபிகை நாடிப்போன புலவர் ஒருவர் அங்கே நேர்ந்த நிலைமையை நெஞ் சம் வருக்திஇவ்வாறு செவ்வையாகக் குறித்து உரைத்திருக்கிரு.ர். o உலோபத்தின் நிலையும் அதனையுடைவரது புலையும் அவரை அனுகினரது அவலமும் இதல்ை உணர்த்தப்பட்டன. -o-o-o: 673. கூட்டித் தொகுத்துவைத்த குப்பைதனைத் தன்புலத்தில் ஊட்டி உகவா உழவன்போல்-ஈட்டிவைத்த ஒண்பொருளே நல்லறத்தில் ஒர்ந்து புரியாதான் மண்புதைய மாண்டு படும். (e.) இ-ள் தான் கூட்டிவைத்த குப்பையைத் தன் நிலத்தில் பரப்பி விளைவை விருத்திசெய்யாத உழவன் போலத் தான் ஈட்டிவைத்த பொருளை நல்ல கருமங்களில் பரப்பி நலங்களை அடைந்து கொள் ளாத உலோபி இழிந்து அழிந்து படுவான் என்பதாம். உலக வாழ்க்கைக்குப் பொருள் மிகவும் தேவையாயிருக் தலால் யாவரும் அதனை ஆவலோடு வருந்திக் கேடுகின்றனர். அவ்வாறு தேடித் தொகுத்த பொருளை நாடிவகுத்து நல்ல வழி களில் வழங்கிவரின் அது எவ்வழியும் சிறந்த செல்வத்திருவாப் உயர்ந்து வரும். தேடியதை நாடிச் செலவுசெய்பவன் செல்வச் சீமானப்ப் பேரும் சீரும் பெறுகிருன்; அவ்வாறு செய்யாதவன் புல்லிய உலோபியாப்ப் புலேயுற்று இழிகின்ருன். கிணற்றில் ஊறிய நீரைப் பயிர்களுக்குப் பாச்சுதல் போல் முயற்சியால் ஏறிய பொருளை உயிர்களுக்கு ஊட்டின் அந்தச் செல்வன் நல்ல புண்ணியவானுயுயர்ந்து எண்ணிய இன்பகலங் களை யெல்லாம் எளிதே எப்துகின்ருன். அங்கனம் உதவாதவன் பொருளின் பயனே இழந்து வறிதே அழிகின்றன். பொருளைச் சேர்ப்பது இன்பமும் அறமும் புகழும் அடைய வேயாம்; உரிய பயன்களைத் தக்க பருவத்திலேயே பக்குவமா அடைந்து கொள்ள வேண்டும்; அவ்வாறு அடையாவழி அப் பொருள் கடையாய்க் கழிந்தேபோம். தான் தேடிய பொருளின் பயனைச் செவ்வையாய் அடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/57&oldid=1326614" இலிருந்து மீள்விக்கப்பட்டது