பக்கம்:தரும தீபிகை 5.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உலோபம் 1597 யாமல் வீணே சேர்த்து வைத்திருப்பவன் குப்பையைக் கூட்டி வைத்த விளக்குமாறு என இளிக்கப்பட்டுள்ளான்.

பல்வே றிடத்தில் பரந்து கிடந்திருந்த புல்லாதி யெல்லாம் புடைதொகுத்து-நல்ல பயன்ஒன் றறியாப் படுசோ கனிபோல் நயனறியான் லோபி 5வை.”

பாடுபட்டுச் சேர்த்தும் பொருளின் பயனே அனுபவியா மையால் உலோபியை விளக்குமாறு என்று காரணம் காட்டி இது விளக்கியுள்ளது. சோகனி=துடைப்பம். உவமானம் அவமானமாய் வந்திருந்தாலும் உள்ள ஒப்பு நிலைகளை, நுட்பமா ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். கூட்டிவைத்த குப்பையை நிலத்தில் இட்டுப் பரப்பினுல் அந்த நிலம் சிறந்த உரமுடையதாய் உயர்ந்து நல்ல விளைவுகளை நல்கி அருளும்; அவ்வாறு பரப்பாமல் குவித்தே வைத்திருந்தால் அது வினேகெட்டு விளிந்துபோம்; ஈட்டிவைத்த பொருளை எளிய பிராணிகளுக்கு ஊட்டி உதவில்ை அது புண்ணியமாய்ப் பொங்கிப் பெரும் போகங்களை நீட்டியருளும்; அங்ங்னம் உதவா மல் இருந்தால் அது தானகவே கெட்டு அழிந்துபோம் என்க. வருந்தித் தொகுத்த பொருளை வறிதே அழிந்து போக விடுவது கொடிய மதிகேடாப் முடிகின்றது. அந்த முடிவைத் தனது சொந்தமாக்கி உலோபி கிங்தனையடைந்து முடிகின்ருன். எருவைச் சேர்ப்பது நிலத்தினுக்கு இடுவதற் கன்றிப் பெருமையாக் குவித்துயர்வுறப் பேணுதற்கு அன்றே அரிய நன்பொருள் படைத்தவன் அறம்இன்பம் அடையாது ஒருமையாய்த் தொகுத் திடினது பழியுடன் ஒழியும், (1) ஆக்கிய பொருளோல் அறத்தில் ஆக்கினன் பாக்கிய வான்.அதைப் பதுக்கி வைத்தவன் தேக்கிய கழிவுர்ேச் சிறுகிடங்கென மேக்குயர் பழியொடு வெம்பி வீழுமே. (2) கழிந்த வெங் குட்டத்துள் கலந்து கிற்குர்ே பொழிந்த புண்ணுற்றமே புறத்து வீசல்போல் இழிந்துறும் உலோபர்பால் இருக்கும் வெம்பொருள் வழிந்தபுன் பழியையே வளர்த்து மாயுமால், (3) (வீரபாண்டியம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/58&oldid=1326615" இலிருந்து மீள்விக்கப்பட்டது