பக்கம்:தரும தீபிகை 5.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1598 த ரும தீ பி ைக உலோபியின் பொருள் நிலையை இவை குறித்து வந்துள் ளன. குறிப்புகள் கூர்ந்து நோக்கி ஈண்டு ஒர்ந்து உணரவுரியன. செல்வம் எவரிடமும் கெடிது கிலைத்து நில்லாதது;அது கன் பால் நிலைத்திருக்கும் போதே மனிதன் நல்லதைச் செய்து கொ ஸ்ளவேண்டும். அவ்வாறு செய்தவன் உப்திபெற்று உயர்ந்து போகிருன்; செய்யாதவன் வெய்ய பேதையாய் இழிந்து படுகிருன். பனகசை பழி வசையாப் வருகிறது. ஈயாத உலோபியை எவரும் வெறுக்கின்ருர், உற்றமனைவி யும் ஊனமா இகழ்கின்ருள்; பெற்றபிள்ளைகளும் பிழைபடப் பேசுகின்ருர். அவனது வாழ்வு அவலமாயழிகின்றது.

ஈகையில் லாது.பொன் ஈட்டுவோன் கொண்ட தோகையும் மைந்தரும் தொலைகிலான் என ஒகையாப் அருவிடம் உணவில் இட்டு அவன் சாகையே கருதிமா தவம்செய் வார்களே.' (நீதிநூல்)

பொன் காத்த பூதம் போல் பணத்தை உலோபி பற்றி நிற் பன் ஆதலால் அவன் செத்துக் கொலைவதையே எல்லாரும் விரும்பி எதிர் பார்த்து நிற்பர் என இது குறித்துள்ளது. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்--கூடுவிட்டிங்கு ஆவிதான் போனபின் பாரே அநுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம். o (நல்வழி,22, ஈட்டிய பொருளை அனுபவியாமலும், அறம் செய்யாமலும் வினே தொகுத்து மறைத்து வைத்திருக்கும் உலோபிகளை நோ க்கி இரங்கி ஒளவையார் இவ்வாறு புக்தி போதித்திருக்கிரு.ர். பொருளால் அடையவுரிய பயனை இழந்துவறிதே மடிந்து போ வது பெரிய மருளாயுள்ளது. மருண்டமனப்பற்ருல் இருண்ட இழிவுகள் திரண்டு வருகின்றன; வரவே யாதும் அறியானப் அவலமாயிழிந்து அவன் கவலையோடு அழிகின்ருன். பித்து பணத்தில் பெருகவே எத்திறத்தும் செத்தவன் ஆவன் சிதைந்து. உலோபியின் செத்தவாழ்வை இது உணர்த்தியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/59&oldid=1326616" இலிருந்து மீள்விக்கப்பட்டது