பக்கம்:தரும தீபிகை 5.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உ. லோப ம் 1599 878. ஈயா திவறும் இழிமகன்தன் செல்வத்தின் ஒயா வறுமை உயர்ந்ததே-பேயாகும் வன்பிறப்பும் பொல்லா வசையும் ஒழியாத புன்பிறப்பும் நல்கா புகுந்து. (E) இ-ள். ஈயாத உலோபியான இழிமகன் எய்தியுள்ள செல்வத்தி ம்ை ஓயாத வறுமை நல்லது; பொல்லாக பேப்ப்பிறப்பும் புலே யான பழியும் இழிவும் அது நல்கா என்க. * செல்வம் உயர்க்க சிறப்புடையது; கன்னே உடையானுக்கு எல்லா மேன்மைகளையும் அருளவல்லது. அத்தகைய செல்வம் புலையான புல்லரிடமிருந்தால் கலைமை சிதைந்து நிலைமை குலைந்து தாழ்ந்து அழிகின்றது. உடையவன் இயல்பின் படியே உடை மைகள் செயலடைந்து வருவது உலகக் காட்சியாயுள்ளது. உள்ளத்தில் நல்ல இயல்பு இல்லாத புல்லரிடம் செல்வம் சேர்ந்தால் அது அல்லலாப் அவலமே அடைகின்றது. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் கன்பால் கலந்தீமை யால்திரிங் தற்று. (குறள், 1000) நல்ல பசுவின் பாலும் கெட்ட பாத்திரத்தில் இட்டால் கெட்டுப்போம்; அது போல் இன்ப நிலையமான நல்ல செல்வ மும் பண்பு இல்லாக புல்லனிடம் சேர்ந்தால் புலையாயிழிந்து படும் என இது உணர்த்தியுள்ளது. பாத்திர பேதத்தின் இழிநிலை விழி தெரிய வந்தது. 'மூத்திரக் கலசத் துற்ற முதியதிம் பாலும் திதாய் மாத்திரைப் பொழுதில் மாறி மாசுறும் அதுபோல் செல்வம் இத்திற முடையார் பக்கல் சேரினே தோம்; யாவும் பாத்திர பேதத் தாலே பழிகிலே யடைந்து பாழாம்.” சிறந்த பொருளும் சேர்ந்த இடத்தின் புன்மையால் இழி ங்,து படும் என்பது இகளுல் உணர்ந்து கொள்ள வந்தது. பொருள் அடைந்தவன் மருளடைந்து மயங்கி மாள்வது இருள டைந்த தீமையாய் இயங்கிவருகிறது. மனநலம் உடையனப் மனிதன் உயர்ந்தபோது எல்லா மாண்புகளும் இனிதே விளைந்து வருகின்றன. உள்ளம் இழிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/60&oldid=1326617" இலிருந்து மீள்விக்கப்பட்டது