பக்கம்:தரும தீபிகை 5.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1600 த ரும தீ பி. கை படின் யாவும் இழிவாப் எவ்வழியும் ஈனமுறுகின்றன. அகத்தில் நல்ல பண்புடையவன் புறத்தே செல்வம் இலன யினும் சிறப்பும் சீரும் பெறுகின்ருன்; அந்தப் பண்பு இல்லாத வன் எவ்வளவு செல்வங்களை எய்தியிருந்தாலும் யாதொரு மேன் மையும் காணுமல் இழிந்தே நிற்கின்ருன். அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும் கள்ளிமேல் கைடேட்டார் குடும்பூ அன்மையால் செல்வம் பெரிதுடையர் ஆயினும் கீழ்களே கள்ளார் அறிவுடை யார். (நாலடியார்,262) ஈயாக கீழ்மக்களிடம் மிகுதியாய்ச் செல்வம் பூத்திருந்தாலும் அவை கள்ளிப்பூக்களைப் போல் எள்ளப் படும் என்னும் இது ஈண்டு உள்ளி உணரவுரியது. பொருள் பெருமையுடையதாயி னும் மருவிய இடத்தின் சிறுமையால் மதிப்பிழந்து படுகிறது. ஈயும் இயல்பில்லாத இழிமகன் செல்வம் பெற்றிருப்பதை விட அதனைப் பெருமல் இருப்பது நல்லது. பொருள் இல்லையா ஞல் அவனுடைய புன்மை வெளியே தெரியாது. வன்னெஞ் சன்,கொடியவன், உலோபி, பாபி என்னும் பழிகள் நேரா. பொருளுடைமையால் இழிபழிகள் நேர்தலால் அங்க மருள ை க்கு வறுமை நல்லது என வந்தது. வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் மற்றையோன் நல்குரவே போலு நனிநல்ல கொன்னே அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று பலரால் இகழப் படான். (நீதிநெறிவிளக்கம்,67) செல்வமிருந்தும் ஈகையில்லையானல் அவனுக்கு வரும் இழிவு களை விழிகெரிய இது விளக்கியுள்ளது. வறிய ஏழையினும் பொருளுடைய உலோபி பழிகளை யடைந்து பாழ்படுகின்ருன். வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் இழந்தார் எனப்படுதல் உய்ந்தார்.--உழந்ததனேக் காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தம் கைக்கோவ யாப்புய்ந்தார் உய்ந்த பல. (நாலடியார்,277) செல்வமுடைய உலோபியினும் வறியவர் பலவகையினும் உயர் கலங்களையடைந்துள்ளார் என்னும் இது இங்கே சிந்திக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/61&oldid=1326618" இலிருந்து மீள்விக்கப்பட்டது