பக்கம்:தரும தீபிகை 5.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உ. லோபம் 1601 அரியது. உலோபி பணத்தைப் பூமியில் புதைத்து வைப்பன்; அந்த அல்லல் வறியவர்க்கு இல்லை ஆதலால் கல்லுதலும் உய்க் தார் என்ருர். இங்கே சொல்லியுள்ள குறிப்புகள் பலவும் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவுரியன. - ஈயாத உலுத்தன் ஒருவன் பிறர்க்குத் தெரியாதபடி தன் பொருளைப் பூமியில் தோண்டிப் புதைத்து வைத்தான். அப் பொழுது பூமிதேவி அவனைப்பார்த்துச் சிரித்தாள்: எ மூடனே! என் வாயில் நீ பொன்னேயிடுகின்ருப்! நான் உன் வாயில் என்னை இடுவேன்; அதாவது மண்ணைப் போடுவேன்' என்று புன்னகையோடு சொன்னுள். - என்வாயில் பொன்னே இடுகின்ருய் பேதையே! உன்வாயில் என்னே இடுவேன்காண்---என்னவே - பூதேவி சொன்ன பொருள்மொழியை அம்மூட மூதேவி கேளான் முனம்.” தன் பொருளை இவ்வாறு மண்ணில் புதைத்துப்போன அந்த உலோபி சிலகாலம் கழித்து வந்து கிளேத்துப் பார்த்தான்; அங்கு யாதொன்றும் காணுமையால் அலறி எங்கி அழுதான்; ஆவி தீர்ந்துபோனன். பொருளில் மருள்கொண்டுள்ள உலேர்பி களுடைய வாழ்வு இழிவும் இன்னலும் படிந்து எவ்வழியும் இவ்வாறு பரிதாபமாகவே முடிந்துபோகின்றது.

  • - -

பேயாம் பிறப்பும் வசையும் நல்கும். என்றது ஈயாமையால் எய்தும் இழிதுயரங்களைக் தெளி அற விளக்கியபடியாம். பொருள் கையில் இருந்தும் உள்ளம் இங்கி உதவாத பாவத்தால் மனிதன் மறு பிறப்பில் பேயாய்ப் பிறக்கின்ருன். 'ஈயாது இவறும் மருளான் மானப் பிறப்பு ஆம்' என்ற தேவர் அருள்மொழியும் ஈண்டுப் பொருள் தெரியவுரியது. இவ்வாறு இழி பிறப்பும் பழி வசையும் அடையாமல் பொரு ளுடையவர் விழிதிறந்து தெளிவடைந்து உய்ய வேண்டும். உற்ற பொருளால் உயிர்க்குறுதி செய்கவின்றேல் பெற்றன எல்லாம் பிழை. இதனை உய்த்துணர்ந்து உறுதி கலம் பெறுக Q()1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/62&oldid=1326619" இலிருந்து மீள்விக்கப்பட்டது