பக்கம்:தரும தீபிகை 5.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1602 த ரும தி பி கை 674, ஐம்புலனும் ஆர அருந்தார் அறங்கருதி இம்பரிசை ஏற இனிதியார்-வம்பமைய ஈட்டி இருந்தார் இருந்துயரே கண்டுபழி நீட்டி யழிந்தார் நிலை. (+) இ-ள் உலோபிகள் நல்ல சுகபோகங்களை அனுபவியார், கரும நலம் கருதி உதவிபுரியார்; பொருளை ஈட்டித் தொகுத்து விணே கூட்டிவைத்துப் பழி இழிவுகளை நீட்டி நிறுத்தி அழிவர் என்க. இது உலோபியின் மயல் இயல்களை உணர்த்துகின்றது. வேகோடிகள் யாவும் தேக போகங்களை ஆவலோடு நுகர்ந்து வருகின்றன. படுகின்ற பாடுகள் எல்லாம் வயிற்றுப் பசியைத் தணித்துச் சுகமாய் வாழவேண்டும் என்றே யாவரிட மும் நீளமாய்த் தொடர்ந்து வந்துள்ளன. இயல்பான இந்த நியமம் உலோபிகளிடம் அயலாப் விலகி நிற்கிறது. ஈட்டிய பொருள் யாதும் குறைந்து படாமல் நிறையச் சேர்த்துவைப்பதே அவரது இயல்பாப் இசைந்திருக்கலால் பொறி நுகர்ச்சிகளை ஆனவரையும் அவர் அடக்கிக்கொள்ளு கின்றனர். மானம் மரியாதைகளையும் இழந்து விடுகின்றனர். நல்ல உணவுகளை உண்ணுர்; சிறந்த ஆடைகளை அணியார்; உயர்ந்த காட்சிகளைக் காணுர்; எப்படியாவது வயிற்றைக்கட்டி வாயைக்கட்டிப் பொருளைச் சேர்த்து வைப்பதிலேயே கண் லும் கருத்துமாயிருப்பர் ஆதலால் உலோபிகளுடைய வாழ்வு வறுமை கோய்ந்து எவ்வழியும் பரிகாபமாகவே படிந்த கிற்கும். பொருள்வளங்கள் நிறை ங் திருந்தாலும் உலோபத்தால் யாதொரு போகங்களையும் அனுபவியாமல் இருப்பதால் உலோபி செல்வம் பெற்றும் ஏழையாய், உயிரிருக்தம் செக் கவனப்எள்ளி இகழப்பட்டு வினே இழிந்துள்ளான். - வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணுன் செத்தான் செயக்கிடந்த தில். (குறள், 1001) வீடு நிறைய அதிகமான பொருளை வைத்திருந்தும் உலோ பத்தால் நல்ல உணவு முகவிய போகங்களை அனுபவியாதவன் உயிர் உளஞயினும் செத்தவனே எனக் கேவர் இங்கனம் உரைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/63&oldid=1326620" இலிருந்து மீள்விக்கப்பட்டது