பக்கம்:தரும தீபிகை 5.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உலோபம் 1603 திருக்கிரு.ர். அறிவுடைய உயிரின் பயனை அடைந்துகொள்ளா மையால் செத்தான் என்ருர். நுகர்வில் உணவு மிகவும் அவசியம் ஆனது; அதனேயும் உலோபி சரியாக உண்ணுன் என்ற கல்ை அவனது ஊனநிலை உணரவங்தது. உண்ணுன் ஒளிகிருன் ஒங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களேயான்---கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ இழந்தான் என்று எண்ணப் படும். (நாலடியார் 9) உலோபியின் இ ழ ைவ பு ம் இழிவையும் அழிவையும் மேலோர் இங்ஙனம் பரிவோடு உணர்த்தியுள்ளனர். பொருள் எப்படியும் அழியும் இயல்பினது; அது தன்கையில் உள்ள போதே அனுபவித்துக்கொள்ளவேண்டும்; அங்கனம் அனுபவி யாமல் உலோபி அவலமாய் அழிந்துபோகிருன்; போகவே, அந்தப்பொருளை அயலார் கவர்ந்து போகின்ருர். பொருளின் பயனே அடையாமல் உலோபி மருளய்ை இழிந்து உழலுதலால் அவனே யாவரும் இகழ்ந்து பழிக்கின்ருர். மானமும் மதிப்பும் மனிதத் தன்மையும் இல்லாதவனப்ப் பிசுனன் பிழைபட்டு நிற்கின்ருன். அவனது நிலை பரிதாபமாயுளது. “Misers are generally characterised as men without honour or without humanity, who live only to accumulate, and to this passion sacrifice every other happiness.” (Goldsmith) 'கண்ணியமும் மனிதத்தன்மையுமின்றிப் பொருளைச் சேர்த் துவைப்பதே உலோபிகளின் இயல்பாயுள்ளது; இந்தப் பணப் பற்ருல் எல்லா இன்ப நலங்களையும் அவர் துறந்து விடுகின்ற னர்' என்னும் இது இங்கே அறிய வுரியது. பொருளின் மேலுள்ள மருளால் மனிதன் பேயனப்ப் பிழைகளில் இழிந்து பழிகளில் ஆழ்ந்துள்ளான். உலோபம் உள் ளத்தில் புகுந்தால் அந்த மனிதன் உலகத்தின் எள்ளல்களையெல் லாம் மறந்து பொருள் ஒன்றையே எவ்வழியும் இறுகத் தழுவி இருள் மண்டிக்கிடக்கின்ருன். கருமி, உலுத்தன், பிசுனன், கிருபனன் என்று உலோபிக் குப் பெயர்கள் வாய்ந்துள்ளன. இந்தப் பெயர்க் குறிப்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/64&oldid=1326621" இலிருந்து மீள்விக்கப்பட்டது