பக்கம்:தரும தீபிகை 5.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1604 த ரும தீபிகை அவனுடைய இழிவுகளை விழிதெரிய விளக்கிப் பழிகளையும் துலக்கி கிற்கின்றன. உற்ற நாமங்களால் குற்றங்கள் தெரிந்தன. தருமம் புகழ் முதலிய அருமை கலங்களையெல்லாம் இழந்து சிறுமையாளன யிருத்தலால் உலோபி கருமி என நேர்ந்தான். புண்ணியவான் தருமி என வந்தான். பாவி கருமி TఙT நின்ருன். தீய காரியங்களைச் செய்கின்ற பாவகாரியைக் குறித்து வரும் கருமி என்னும் பேரைத் தனக்குக் தனி உரிமையாக உலோபி பெற்றிருத்தலால் அவனுடைய புலே நிலைகளை அது உய்த்துணரச் செய்தது. பொருளை இறுகப் பற்றி மருளனப் இருள்மண்டிக் கிடப் பனே அன்றி வேறு தீய செயல்களை உலோபி துணிந்து செப் யான். அப்படியிருந்தும் அவன் பாவி என நேர்ந்தது கிலேமை களைக் கூர்ந்து உணர்ந்துகொள்ளவந்தது. அறம் புகழ் இன்பங்களை ஆக்கவுரிய பொருளை அகியாய மாய்த் தடைசெய்து அவலப்படுத்தி யிருத்தலால் உலோபி பாபி என நேர்ந்தான். அவனது இருப்பு பலருக்கும் வெறுப்பாய்ப் பழி விளைத்து கின்றது. "ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் கிலக்குப் பொறை.' (குறள் 1003) - பொருள் ஈட்டம் ஒன்றிலேயே நசைகொண்டு மண்டி வேறு புகழ் நலங்களை விரும்பாக மனிதரது பிறப்பு இந்த உலகத் 'திற்குப் பெரிய பாரமாம் எனத் தேவர் இவ்வாறு கூறியுள்ளார். இதில் குறித்துள்ள குறிப்புகள் கூர்ந்து சிந்திக்கவுரியன. உலோ :பிகள் பெரிய பாவிகள் ஆதலால் அவரைத் தாங்கிக்கொண் டிருப்பது கொடிய சுமையாகப் பூமிகேவி கவித்துக்கொண் டிருக்கிருள். இதல்ை அவரது ஈனமும் இழிவும் எளிது புலம்ை. ஈட்டி இருந்தார் பழிபேட்டி அழிந்தார். -- புகழ் யாதும் ஈட்டாமல் பழிகளையே யீட்டி உலோபிகள் பாழாப் இழிந்து அழிந்துபோகும் அவலநிலைகளைக் கவலையோடு இது காட்டியுள்ளது. பொருளில் மருளாய் இழிந்துபோகாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/65&oldid=1326622" இலிருந்து மீள்விக்கப்பட்டது