பக்கம்:தரும தீபிகை 5.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உலே ாபம் 1605 தெருளுடையராய் உயர்ந்து கொள்வோரே அருளும் அறமும் படிந்து உத்தம் கதிகளை அடைந்து கொள்ளுகின்ருர். உலுத்தனப் இழியாதே; உத்தமனப் உயர்ந்துகொள்க.

  • = *

675. உள்ளிரங்கி ஈயா உலோபம்போல் இவ்வுலகில் எள்ளல் தருமிழிவொன் றில்லையே-வெள்ளமெனச் செல்வம் இருந்தாலும் தீயன் கொடியனெனச் சொல்விக்கும் ஆக்கும் துயர். (டு) o இ-ள் உள்ளம் இரங்கி ஈயாக உலோபம்போல் இவ்வுலகில் எள் ளலான இழிவுகள் வேறு பாதும் இல்லை; வெள்ளம் என்னும் படி நிறைந்த செல்வங்கள் இருந்தாலும் கொடியன் இயன் எனப் பழிகளை வளர்த்து மனிதனை அது பாழ்படுத்தும் என்க. அன்பு இரக்கம் முதலிய பண்புகள் மனிதனே உ யர்த்தி மகிமைப்படுத்தி வருகின்றன. இந்த இனிய நீர்மைகளை இழந்த அளவு மனிதன் இழிந்து நிற்கிருன். குனகலங்களை இழந்தவன் பிணநிலையில் பிழை பட்டுள்ளான் என ஒரு பெரியவர் மறுகி யிருக்கிரு.ர். இயல்பு குன்றிய பொழுது உயர்வுகள் ஒழிகின்றன. உலோபி பொருளிலேயே மருள்கொண்டு மயங்கி யிருத்த லால் அருள் முதலிய குண நீர்மைகளே அடியோடு இழந்து அவலமாய் நிற்கிருன். நெஞ்சம் இரங்காக நெடிய கொடிய வன்கண்மையே அவனுக்குக் கஞ்சமாய் அமைந்திருக்கிறது. தாட்சணியம் தனகாசம் என்பது பழமொழி. இது உலோபி யினுடைய வாய்மொழியாய் முதலில் விளைந்து வந்தது. இக னேயே வேதமந்திரமாக எப்பொழுதும் அவன் செபித்து வரு கிருன். சமயம் சேர்ந்த போதெல்லாம் இந்த வாசகத்தை வெளியே சொல்லி உள்ளே களிப்பூர்ந்துள்ளான். * - உலோபிகளுடைய கருத்தும் குறிப்பும் பேச்சும் செயலும் பிழைபாடுகளே பெருகியிருக்கின்றன. இருப்பினும் அவற்றி லிருந்து பாதும் திருக்காமல் யாண்டும் சேமாப் நீண்டே நிற் கிருர், படிந்த பழக்கம் முடிக்க முடிபாப் மூண்டு வருகிறது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/66&oldid=1326623" இலிருந்து மீள்விக்கப்பட்டது