பக்கம்:தரும தீபிகை 5.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1606 தரும பிேகை ஈகைக்கு இரக்கம் காரணமாயிருத்தல்போல் ஈயாமைக்கு இரங்காமை ஏதுவாயிருக்கிறது. ஆகவே அருள் இழந்த மரு ளாப் உலோபம் இருள்படிந்துள்ளமை தெருளலாகும். ஈகை புகழை வளர்த்து வருகிறது. ஈயாமை பழியை விளேத்து கிற்கிறது. ஈகையாளன் இசையும் இன்பமும் எய்துகிருன். ஈயாக உலோபி வசையும் துன்பமும் மருவுகிருன். “ஈவானே தெய்வம்” என்ருர் ஒளவையார். ஈயாதவன் பேய் என்பது இகளுல் பெறப்பட்டது. யாருக்கும் உதவாத உலோபியை நோக்கிப் பொன்காத்த பூதம் என வையம் வை.துவருகிறது. இவ்வசையை யாவரும் அறிந்து வருகிருர் வசையுடையவர்.இசை அடையாது போகிரு.ர். இவ்வுலகில் மிகவும் இழிவான செயல் பிறரிடம் போய் இரங்து நிற்பதே. அதைக்காட்டிலும் இழிக்க பழி அவ்வாறு வருந்தி வந்து இரங்தவருக்கு இல்லை என்று சொல்லுவதேயாம். ஆகவே, உலோபியினுடைய பழிகிலே எவ்வளவு இழிநிலையி லுள்ளது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். "ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று ” (புறம் 204) கழைதின்யானையார் என்னும் சங்கப்புலவர் இங்ங்னம் பாடியுள்ளார். யாசகம் இழிவே ஆயினும் அதைவிட உலோபி யின் இழிவு கொடிய பழியுடையது என அவர் விழிதெரிய விளக்கியிருக்கும் நயம் வியந்து சிந்திக்கவுரியது. ஈயா உலோபம்போல் இழிவு இல்லையே. இதில் ஏகாரம் உணர்த்தி கிற்கும் பொருளை உள்ளச் செவி பால் ஒர்ந்துகொள்ளுக. அரிய பொருளை அடைந்திருந்தும் உரிய புகழை அடைந்துகொள்ளாமல் கொடிய பழியாளனுப் உலோபி இழிந்து நிற்பது நெடிய துயரமாய் நீண்டுள்ளது. தனது பொருளின் மருளால் தனக்கு வசையும் இழிவும் வருதலை அறியாமல் இருப்பதால் உலோபி கொடிய வெறிகொண்ட பெரிய ஒரு மடையன் என அறிவுலகம் பரிவோடு அவனை இகழ்ந்து கின்றது. பழிப்புரைகள் விழிப்புற வர்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/67&oldid=1326624" இலிருந்து மீள்விக்கப்பட்டது