பக்கம்:தரும தீபிகை 5.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. க ர வு 1545 மேனம் புனிதமானவரே மகான்களாப் உயர்ந்து மனுக்குலத்தை உயர்த்தி வருகிரு.ர். அரிய மாட்சிகளை யெல்லாம் உரிமையோடு உதவவல்ல மனத்தைச் சிறிய புன்மைகளால் பழுதுபடுத்தி வரு வது பரிதாபமாகின்றது. பாழான அது ஒழிய வேண்டும். நேர்மை அழிந்து நெறி இழந்து. - என்றது உள்ளத்தில் காவு புகுந்தபொழுது உளவாகும் இழவுகளை உணர்த்தி கின்றது. இழிவு புகவே உயர்வுகள் ஒழிந்து போகின்றன. ஊனங்கள் பெருகி வருகின்றன. o நேர்மை, நெறி, நீர்மை, சீர்மை என்பன உயர்ந்த பண் :பாடுகள். அவை சிறந்த மேன்மைகளை அருள வுரியன. - மனம் வாக்கு காயம் என்னும் மூன்றும் ஒருமையாய்ச் செம்மை கோய்ந்து இருப்பது நேர்மை என வந்தது. இந்தச் செவ்விய தன்மையால் திவ்விய தன்மைகள் உளவாகின்றன. உள்ளும் புறமும் ஒழுங்காய் நேர்மை ஒளி செய்து கிற்றலால் அதனை உடையவர் அரிய மகிமைகளே எளிதே அடைந்து கொள் ளுகின்றனர். உரிய ஒரு நீர்மையால் பெரிய சீர்மைகள் மருவு கின்றன. நேர்மையாளர் மேலோராப் மேலான கதிகளே 'அடைகின்றனர். இந் நீர்மை குன்றி உள்ளம் கரவாப் உள்ளவர் கீழோரா யிழிந்து பாழே அழிந்து போகின்ருர். விளைவுதெரியாமல் வினே கள்ளம் புரிந்து வெந்துயர் உறுவது நிக்தனையாப் நின்றது. உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் எள்ளத்தக்க இழிமக்களாகின்ருர், கள்ளம் இன்றி நேர்மையா யிருப்பவர் ர்ெமையான மேலோராப் பாண்டும் சிறப்படைந்து நிற்கின்ருர், திரிகரனசுத்தி தெய்வீக நிலையமாய்ச் சிறந்து திகழ்கிறது. இந்தக் தாப்மை இழந்த அளவு சிறுமையும் தீமையும் மருவி நிற்கின்றன. மனத்தில் ஒன்றை வைத்து வாக்கில் மாறு பேசிச் செயலில் வேறு புரிவது சின்ன மக்களுடைய சிறு தொழில்களாயுள்ளன. "மகஸ்யங்யத் வசஸ்யங்யத் கர்மண்யங்யத் துராத்மநாம்; மாஸ்யேகம் வசஸ்பேகம் கர்மண்யேகம் மஹாத்மாாம்." 194

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/6&oldid=1326563" இலிருந்து மீள்விக்கப்பட்டது