பக்கம்:தரும தீபிகை 5.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உலோபம் 1611 "கொடுப்பது உம் துய்ப்பது உம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல்.” குறள், 1005) ஈவதும் நுகர்வதும் இல்லாதவர் பலகோடி பொருள்களை ாப்தியிருந்தாலும் அவற்ருல் அவர்க்கு யாதொரு பயனும் இல்லை என இது உணர்த்தியுள்ளது. எண்ணரிய காட்சிகள் எதிரே எய்தியிருக்தாலும் கண் இல்லாத குருடன் காணுது இழிதல் போல் புண்ணியம் இல்லாத உலோபி பொருளின் பயன்களை அடையாது மருளனப் மடிந்து ஒழிகின்ருன். பொருள் கிடைத்தால் அதனை விரைந்து பயன்படுத்திக் கொள்பவர் நயனுடையராகின்ருர். போகத்தை நுகர்வதினும் கையாகிய புண்ணியக்கையே மேலோர் கண்ணும் கருத்துமாய் எண்ணி விரைந்து யாண்டும் அடைந்து கொள்ளுகின்றனர். தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை கிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்பு பலவே.' (நக்கீரர்) உலகம் முழுவதையும் ஆளுகின்ற சக்கரவர்த்திக்கும் ஒன் மறும் இல்லாத ஏழைக்கும் உணவும் உடையும் இனமாயமைக் துள்ளன; அந்த அளவில் கின்றுவிடின் பெருமையாகாது; செல் வத்தின் பயன் ஈதலேயாம்; அகன விரைந்து செய்ய வேண்டும்; செய்யாது நின்ருல் அறம் புகழ் முதலிய அரிய கலங்கள் பல ஒழிந்து போம் எனக் கல்வி வீரராகிய நக்கீரர் செல்வத்தின் பயன இங்ங்னம் நன்கு உணர்த்தியுள்ளார். பயன் படுத்தாத செல்வம் பாழ்படுகின்றது; தன்னைத் கடைப்படுத்தி வைத்திருந்தவனுக்கும் கொடிய பழியை விளைத்து விட்டு நெடிய வழியில் விரைந்து போப் விடுகின்றது. "வழங்கலும் துய்த்தலும் தேற்ருதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம்-தழங்கருவி வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்ருே நாய்பெற்ற தெங்கம் பழம்.' (பழமொழி, 151)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/72&oldid=1326629" இலிருந்து மீள்விக்கப்பட்டது