பக்கம்:தரும தீபிகை 5.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1610 த ரும பிே கை தன் பால் வந்து இரக்கவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்க வேண்டுமே என்னும் ஆவலால் தனது அருமைக் காதலியையும் பிரிந்து ஒரு தலைவன் பொருள் தேடப் போயிருக் கலை இது குறித்திருக்கிறது. குறிப்பு கூர்ந்து சிக்திக்க வுரியது. ஈட்டிய பொருளைப் போகங்களாக்கி நன்கு அனுபவிப் பவன் சுகி, போகி என நிற்கின்ருன். வங்க விருத்தினரைப் பேணி எந்த வகையிலும் யாருக்கும் உதவி புரிந்து வருபவன் உபகாரி, கருமவான் எனப் பெருமை மிகப் பெறுகின்ருன். இரு நிலையில் வையாப் பொருள் கடையாய் ஒழிந்தது. ஈதலிலும் அனுபவித்தலிலும் செலவு செய்யாமல் வினே சேர்த்து வைத்திருக்கும் பொருள் கானகவே காசமாய் அழிக் து போகின்றது. அழிவும் போக்கும் வழியமைந்து வருகின்றன. பொருள் எவரிடமும் நிலைத்து நில்லாது; விரைவில் அழியும் இயல்பினது; அது அழிந்து போகுமுன் புண்ணியத்தையும் இன் பத்தையும் விரைந்து செய்து கொள்ள வேண்டும்; அவ்வாறு செப்து கொண்டவன் செல்வத்தின் பயன்களைப் பெற்ற பாக்கி யவான் ஆகின்ருன். அங்ஙனம் செய்து கொள்ளாதவன் வறிய வெறியனப் வையம் இகழ வசை பட்டழிகின்ருன். நீர் நிறைக்க ஒரு குளத்திற்கு இரண்டு மதகுகள் அமைக் திருந்தன. அந்த மடைகள் வழியே நீர் வெளியே பாய்ந்து பயிர் களையும் உயிர்களையும் நெடிது வளர்த்து வந்தன. ஒரு நாள் ஒருவன் வந்து அவற்றை இறுக்கி முறுக்கி அடைத்து விட்டான்; விடவே கண்ணிர் பெருகிக் கரையை உடைக்தக் கொண்டு முழுதும் வெளியே போய்விட்டது; அது போல் ஒருவனிடம் நிறைந்த பொருளை ஈதல் அனுபவித்தல் என்னும் இரண்டு இனிய வழிகளில் செலவு செய்து வர வேண்டும்; அவ்வாறு செய்யாமல் உலோபமாய்க் குவித்து வைத்திருக்கால் அது விரைந்து சிதைந்து அடியோடு அழிந்து போய்விடும் என்க. தானும் அனுபவியாமலும் தக்கார்க்கு உதவாமலும் விணே பொருளைத் திரட்டி வைத்திருப்பது மதிகெட்ட மருனர் செயலா தலால் அவர் பழிபட்டு இழிவுறுகின்றனர். ஈட்டி வைத்த செல் வமும் அவரை எள்ளி இகழ்ந்து விட்டு அயலே அகன்று போப் விடுகின்றது. மயலோடு உலோபர் மறுகி மாப்கின்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/71&oldid=1326628" இலிருந்து மீள்விக்கப்பட்டது