பக்கம்:தரும தீபிகை 5.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுபவித்தல் தன் உடலளவில் உரிமையாகிறது. ஈதல் உயிருக்கு உறுதி புரிகிறது. கல்விக்கு அறிவும் ஒழுக்கமும் பயன் ஆகல்போல் செல் வத்துக்குஅன்பளித்திலும் தலம் பயன்களாயுள்ளன. பிறர்க்கு உபகாரமாப் ஈவது புண்ணியமாய் விளைந்து வந்து கன் உயிர்க்கு இன்பம் தருதலால் ஈதலே கலையாய பயனுய் நின்றது. H- அனுபவித்தலினும் ஈதலை இதில் முதலில் குறித்தது உயிர்க்கு ஊதியமீாய் அது உறுதி புரிதல் கருதி. எடுத்த உடம்பு அளவில் அனுபவம் முடிகிறது, ஈதல் உயிரோடு புகுந்து தொடர்ந்து எவ் வழியும் இதமாய் இன்பம் சுரந்து வருகிறது. 'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு." (குறள் 231) உயிர்க்கு ஊதியம் ஈதலே எனத் தேவர் இங்கனம் குறித் துள்ளார். இதல்ை அதன் மகிமையும் மாண்பும் அறியலாகும். ஒரு பிறவியில் செய்த ஈகை உயர்ந்த கருமமாய் ஒங்கி உயிர்புக் குழி யெல்லாம் புகுந்து உரிமையாய் மருவி பாண்டும் உய்தி புரிந்து வருதலால் ஈதல் உயிரின் ஊதியம் என வந்தது. 'ஈதற்குச் செய்க பொருளை' என்ருர் கல்லாதனர். 'செல்வம் விரும்பின் பிறர்க்கு அளிப்பத் தேடுக; கல்வி விரும்பின் நெறிகிற்பக் கற்கமன்: அல்லலிலா இன்பமுற எண்ணி அருநெறியில் செல்லின் இடர்நோன்றல் செய்." (இன்னிசை) செல்வம், கல்வி, தவங்களை இது நல்வகையாக உணர்த்தி யுள்ளது. நல்ல உபகாரம் செய்வதே செல்வம் ஆகும். பிறர்க்கு உதவி செய்யும் பொருட்டே உயர்ந்தோர் செல் வக்கைத் தேடுவர் என்றகளுல் அகன் பாடும் பயனும் காடி அறி யலாம். அருள் நலமுடைய மேலோர் பொருள் ஈட்டம் எல்லாம் புண்ணிய நாட்டமாகவே கண்ணியம் படிந்து வந்துள்ளது. 'இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் வல்லா கெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல் அருளே காதலர் என்றி நீயே." (அகம், 53) 2Ꮗ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/70&oldid=1326627" இலிருந்து மீள்விக்கப்பட்டது