பக்கம்:தரும தீபிகை 5.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1608 த ரு ம தி பி கை பும் ஆர நுகர்ந்து யாவருக்கும் 色一 தவிபுரிந் ஆl வருவதே அரிய பொருளின் உரிய பயனும் என இது உணர்த்தி யுள்ளது. பொருள் நிலையை நன்கு தெளிந்து அருள்நிலையில் உயர்க. டி-அ- ை 676. ஈதல் அனுபவித்தல் இல்லாமல் நாசமாய்ப் போதல்இம் மூன்றே பொருள்கிலேயாம்-ஓதிமுன் வைத்த இருநிலையில் வையாப் பொருள்கடையாச் செத்தொழிந்த தாமே தெளி. - (*) உயிர்களுக்கு இரங்கி உதவுதல், போகங்கள் நுகர்தல், வேகமாய் அழிந்துபோதல் ஆகிய இம்மூன்று நிலைகள் பொரு வளின் இயல்புகளாய் அமைந்திருக்கின்றன; முதலில் உள்ள இருவகைகளில் சரியாக வைக்கவில்லையானுல் இறுதி வழியில் முழுதும் விரைந்து ஒழிந்துபோம் என்க. - - இது பொருளின் நிலைகளை உணர்த்துகின்றது. மனிதனுட்ைய முயற்சியால் பொருள் ஈட்டப்படுகிறது. அவ்வாறு ஈட்டிய பொருளை அவன் அனுபவிக்கின்ருன். அனு பவங்கள் பலவழிகளாய்ப் பாவி யுள்ளன. ஐம்பொறிகளும் நுகர்தற்கு ஏதுவாயிருக்கலால் பொருளுக்குப் பொறி என்று ஒரு பெயரும் வந்தது. பொருள் போகங்களாகி மனிதனே ஊட்டியருளுகிறது. இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு, படுக்கப் பாய், படிக்க நூல், நடக்க வாகனம், அணிய அணி, என இன்னவாறு மனிதனுடைய வாழ்க்கையைப் பல வகைகளிலும் பரவி நின்று பொருள் வளம் படுத்தி வருகிறது. ஆக்கம், பாக்கியம் என்னும் பேர்களும் நோக்கவுரியன. "சீரும் வெறுக்கையும் விபவமும் திருவும் - மாவும் ஆக்கமும் வாழ்க்கையும் பொறியும் ஆகும் செல்வத்து அபிதா னம்மே." (பிங்கலந்தை) - மனிதனுடைய வாழ்க்கையைச் சீரும் சிறப்புமாச் செய்து வருகிற செல்வத்துக்கு இவ்வாறு பெயர்கள் வந்திருக்கின்றன. காரணக் குறிகளின் பூரண நிலைகள் கருதி யுனா வுரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/69&oldid=1326626" இலிருந்து மீள்விக்கப்பட்டது