பக்கம்:தரும தீபிகை 5.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1626 த ரும தீ பி. கை 'ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.' என்று எழுத்து முறையில் இங்ங்னம் சுருக்கி உரைத்த ஒளவையார் பின்பு தனியே விரித்து ஈயாக பொருள்கள் போம் வழிகளை விழிகள் காண விளக்கியிருக்கிரு.ர். - 'நம்பன் அடியவர்க்கு நல்காக் திரவியங்கள் பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம்-வம்புக்காம் கொள்ளைக்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம் கள்ளர்க்காம் இக்காகும் காண்.” (ஒளவையார்) நல்ல வழியிலே நல்காத பொருள் பொல்லாத வழிகளிலே புலையாடிப் போம் நிலைகளை இது காட்டியுள்ளது. தனக்கு உடைமையாய் வந்த பொருளை உடையவன் கடமை ஒர்ந்து தக்க வழிகளிலே மிக்க கவனத்தோடு பயன் படுத்த வேண்டும்; அவ்வாறு நெறிமுறையே முறையாகச் செலுத்தாமல் பொருள் வெறி கொண்டு மருள் மண்டி மடைய குய் கின்ருல் மடைதிறந்த வெள்ளம் போல் அது வறிதே வெளியேறி விடுகின்றது. பொருளுடையவன் நல்ல அறிவுடைய ஞயிருக்கால் அவன் செல்வம் ஊருணி நீர்போல் உலகம் உவந்து புகழ உயர்ந்து திகழ்கின்றது; பொல்லாக புல்லயிைருந்தால் அது அல்லலாயிழிந்து அவமே அழிகின்றது. மனிதன் அடைய வுரிய உறுதி கலங்களுக்குப் புருடார்த்தம் என்று பெயர். அது அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு வகையாய் அமைந்துள்ளது. பொருள் ஒன்று மாத்திரம் கண் னுக்குக் கெரிவது, மற்ற அறம் முதலிய மூன்றும் அருவமான வை. உளம் உணர்வு உயிர்கள் போல் ஒருமையாய் மருவியுள்ள அவற்றிற்குப் பொருள் உடலாப் அமைந்திருக்கிறது. உரிய பொருளைக் கொண்டு அரிய உறுதி கலங்களை அடை ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அடையவில்லையாகுல் உயிர் இழந்த உடலாய்ப் பொருள் இழிந்து படுகிறது. உடலைப் பேணு வதும் புண்ணியத்தை நோக்கியே இருக்க வேண்டும். அந்த உய ர்ந்த நோக்கை உடையதே சிறந்த திருவாம்; அல்லாதது இழிந்த மருளாம். பயன் படிந்த அளவு பணம் மணம் பெறுகின்றது. o உண்மையை உணர்ந்த பெரியோர்கள் பொருளின் தன் மையை அறிந்து அதனை சன்மையான வழிகளில் செலுத்தி நலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/87&oldid=1326644" இலிருந்து மீள்விக்கப்பட்டது