பக்கம்:தரும தீபிகை 5.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உ. .ே லா ப ம் 1627 பல பெறுதலால் அவர் உயர்ந்த வானத்தில் ஒர் சிறந்த தானம் பெற்றவராய்க் ககைமையுற்று விளங்குகின்ருர். செல்வத்தைப் பெற்ருர் சினம்கடிந்து செவ்வியராய்ப் பல்கிளேயும் வாடாமல் பாத்துண்டு--கல்லவாம் தானம் மறவாத தன்மையரேல் அஃதென்பார் வானகத்து வைப்பதோர் வைப்பு. (அறநெறிச்சாரம்) செல்வம் பெற்றவர் வாழவேண்டிய வகைகளையும், அவ் வாறு வாழ்ந்து வந்தால் அவர்க்கு வரும் பயன்களையும் இது விளக்கியுள்ளது. வைப்பு=சேம நிதி, செவ்விய இடம்.

  • அழியும் இயல்பினேயுடைய பொருளை அழியாமல் பேணு பவர் யார்?' என்று ஒர் அரசன் பலர் குழுமியிருக்க சபையில் சிலரது நிலைமை தெரியக் கேட்டான். அதனை நல்ல வழியில் வைப்பவரே என்று ஒரு பெரியவர் அதற்குப் பதில்உரைத்தார்

'செட்டும் சீருமாய் வாழ்பவர் செல்வத்தைச் சிறந்த கட்டும் காவலும் ஆகவே பேணுவார்; கதியாய் எட்டி மேல் வரும் இன் பகன் ன லங்களே எண்ணி இட்டு வைகலும் இசையினே எய்துவர் இனிதே." மறுமையில் வறுமையுருமல் வழிசெய்து கொள்பவரே பொருளை அழியாமல் போற்றினவராவார் என இது காட்டி யுளது. நிலையாததை கிலேயாகச் செய்பவர் தலையா னநிலையானர்.

ஈவாரின் இல்லே உலோபர்; உலகத்தில்

யாவரும் கொள்ளாத வாறெண்ணி-மேவரிய மற்றுடம்பு கொள்ளும் பொழுதும் தமதுடைமை பற்று விடுதல் இலர்.” (அறநெறிச்சாரம், 231) இந்தக் கவியின் கருக்கைக் கண் ஊன்றி நோக்குபவர் கலை யின் சுவையையும் பொருளின் நிலையையும் உணர்ந்து மகிழ்வர். ஈயாதவரை உலோபர் என்பது தவறு, ஈகின்றவரே பெரிய உலோபிகள். தமது பொருள் யாதும் குறையாமல் எவரும் கொள்ளாமல் என்றும் அழியா மல் தாம் இறந்த பின்பும் தம்மை விட்டு அகலாகபடி கண்ணும் கருத்துமாப்ப் பொருளைப் பொத்தி வைத்திருத்தலால் வள்ளல்களே நல்ல உலோபிகள் என உல்லாச வினேகமாச் சொல்லியிருக்கும் இதன் அழகை யும் சுவையையும் கூர்ந்து நோக்கி உண்மையை ஒர்ந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/88&oldid=1326645" இலிருந்து மீள்விக்கப்பட்டது