பக்கம்:தரும தீபிகை 5.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1628 த ரு ம தி பி கை வருக்தும் உயிர்களுக்குத் தன் பொருளை அருந்த உதவி அருள் புரிந்து வருபவன் பெருந்திருவாளனப் உயர்ந்து பேரின்ப கலங்களைப் பெறுகிருன். எ ப்திய செல்வம் இனிது பயன்படுங் கால் அது செய்தவமாய்ச் சிறந்து உய்தி புரிந்து வருகிறது. பெற்ற பொருளால் பெரிதும் பெறுதற்கு உரியது கன் உயிர்க்கு இனிய உறுதி நலனே யாம். அவ்வாறு அடைந்து கொள்பவன் அதிசய பாக்கியவானகிருன்; அடையாதவன் கடையா யிழிந்து கதிகலம் இழந்து கழிகிருன். முழவொலி முந்நீர் முழுவதும் ஆண்டோர் விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும் இழவென்அது ஒருபொருளும் ஈயாதான் செல்வம் அழகொடு கண்ணின் இழவு. (பழமொழி) நல்ல உருவ அழகு அமைந்திருந்தும் கண் இல்லையாளுல் அவன் குருடனப் இழிவுறுதல் போல் ஈகையில்லாத செல்வமும் இழிவுபடும் என இது உணர்த்தியுள்ளது. பொருள் அழகுக்கும் Իք եr) E கண்ணுக்கும் இனங்களாயின. இனிய பொருளைப் பெற் றிருந்தும் ஈயாக உலோபி கண்ணில்லாத கபோதி போல் இழிந்து கழிந்து அழிந்து போகின்ருன். அவ்வாறு அவலமாய் ஒழிந்து போகாமல் எவ்வாறும் உதவி கலங்கள் புரிந்துஉயர்ந்து கொள்க. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. உலோபம் இழிக்க புன்மையாம். அதனே யுடையவன் உயர்ந்து கில்லான். உலோபி வசையே அடைவான். இசையும் இன்பமும் எய்தான். ஈயா உலோபம் இழிவையே கரும். ஈதல் இல்லாத பொருள் சாதல் உறும். ஈயாதவன் தீயவன் ஆகின்ருன். யாதும் உதவாதவனப் ஒழிகின்ருன். அருள் இலனப் அவலம் உறுகின்ருன். அவன் பொருள் அவமே அழிகின்றது. சு.அ வது உலோபம் முற்றிற்று.

F== r =====

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/89&oldid=1326646" இலிருந்து மீள்விக்கப்பட்டது