பக்கம்:தரும தீபிகை 5.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத்தொன்பதாம் அதிகாரம். தீ ைம. அஃதாவது தீய செயல்களை விழைந்து புரிந்து இழிந்து திரிவது. பாவத் தீமையை ஒழித்து ஒழுக வேண்டும் என உணர் த்துகின்றமையால் உலோபத்தின் பின் இது வைக்கப்பட்டது. 8ே1. தீயன செய்பவன் தீயன் என இழிந்து மாயும் பழியுள் மடிகின்ருன்-துரயவினை செய்வோன் சிறந்து திருவும் புகழும்கொண் டுய்திபெறு கின்ருன் உயர்ந்து. (க) இ-ள் தீயசெயல்களைச் செய்பவன் தீயவனுயிழிந்து பழிகள் பல படிந்து அழிகின்ருன்; நல்ல செயல்களை யுடையவன் நல்லவன யுயர்ந்து செல்வமும் புகழ்களும் எய்திச் சிறந்து விளங்கி மேலான கதிகளை அடைந்து கொள்கின்ருன் என்பதாம். கல்லவர் எனவும் கெட்டவர் என்றும் மக்கள் சுட்டிச் சொல்லப்படுகின்றனர். கங்கள் குணம் செயல்களால் அவர் அவ்வாறு சொல்ல நேர்ந்தனர். நெறியோடு நடந்து பிறர்க்கு இதமான செயல்களைச் செய்து வாழ்பவர் நல்லவர்.ஆப் உயர்ந்து நலம் பல பெறுகின்ருர். நெறிகேடராய் கின்று கெட்ட காரியங் களேச் செய்து வருபவர் கெட்டவராய் நிமிர்ந்து அல்லல்களை அனுபவித்து அவலமா பழிகின்ருர். எல்லாச் செயல்களுக்கும் எணனங்கள மூல காரணங்களாயுளளன. தன் எண்ணம் நல்லது ஆயின் அந்த மனிதன் நல்லவன் ஆகின்றன்: அது தீயது ஆயின் அவன் தீயவனுய் வருகின்ருன். அக நினைவுகள் புற வாழ்வுகளாய்ப் பொங்கி நிகழ்கின்றன. அந்தக் கரணத்தின் இயக்கங்கள் அதிசய நிலையின. அதில் படிந்துள்ள வாசனையின்படியே வளர்ந்து கிளர்ந்து வெளியே உயர்ந்து தோன்றுகின்றன. மனேவிருக்திகள் அளவிடலரியன; ஆயினும் அவை நன்மை, தீமை என்னும் இருவகை நிலைகளில் அடங்கி மனிதனுடைய பலவகை கிலைகளுக்கும் காரணங்களா யுள்ளன. நினேவின் விளைவுகள் மனித வுலகமாய் நிலவுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/90&oldid=1326647" இலிருந்து மீள்விக்கப்பட்டது