பக்கம்:தரும தீபிகை 5.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1630 த ரும தீ பி. கை நல்லது, நன்று, நன்மை என்னும் மொழிகள் தருமம் நீதி இனிமை முதலிய மகிமைகளை உணர்த்தி வருகின்றன. தீயது தீங்கு கீமை என்பன பாவம் பழி இடர் முதலிய படர்களைக் குறித்து நிற்கின்றன. உற்றதொடர்புகள் ஊன்றி உணர வுரியன. நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களை விளைத்து வருதலால் அந்த மனிதன் நல்லவனப் உயர்ந்து புகழ் புண்ணியங்களை அடைந்து கொள்ளுகிருன்; அதனுல் இருமையும் இன்பம் பெறு கின்ருன். இனிய கருமங்கள் தனி மகிமைகள் தருகின்றன. தீய எண்ணங்கள் தீய செயல்களை விளைத்து வருகின்றன; வரவே அங்க மனிதன் தீயவனப் இழிந்து பழி பாவங்களை அடைகின்ருன்; அடையவே இம்மை மறுமை என்னும் இரு மையிலும் துன்பங்களை நுகர்ந்து துடித்து உழல்கின்றன். தன்னே நல்லவன் என்று உலகம் சொல்ல வேண்டும் என்றே எல்லாரும் பிரியப் படுகின்றனர். கெட்டவன், தீயவன், பாவி என்னும் பேரை யாரும் விரும்புவதில்லை; எவரும் வெறுக் கவே செய்கின்ருர், சீவர்களுடைய இயற்கையான சுபாவங் கள் இவ்வாறு இயைந்து கிற்கின்றன. நின்றும் பிறவிகள்கோ அறும் பரம்பரையாய்ப் பழகி வந்துள்ள பழக்க வாசனைகளால் இழுக்கி வீழ்ந்து இழிவுறுகின்றனர். மனித இனம் அரிய பிறவியை அடைந்து வந்துள்ளது; நல்லது இது, தீயது இது என்று பகுத்து நோக்கி வகுத்து அறி யும் திறன் உடையது; கல்வினையாளர் புண்ணியவான்களாய் உயர்ந்து இன்ப உலகங்களை அடைகின்றனர்; தீவினையாளர் பாவிகளாயிழிந்து நரக துன்பங்களில் அழுத்துகின்றனர் என இன்னவாருன உறுதி உண்மைகளைத் தெளிவாக உணரவுரியது; இத்தகைய மகிமை வாய்ந்த பிறப்பைப் பெற்று வந்தும் சிறப் பான பேறுகளைப் பெருமல் மனிதன் பிழையாயிழிவது கொடிய பரிதாபமாயுள்ளது. பழமையில்பழகியது.வளமையாய் வருகிறது. தனது வாழ்வு உயர்க்க செல்வங்களை அடைந்து சிறந்த வளங்களோடு வளர்ந்து வர வேண்டும் என்றே எந்த மனித லும் சிக்கனையோடு முயன்று வருகிருன்; அவ்வாறு வந்தும் கருதிய பலன்களைக் காணுமல் ம.டி.கி அலேகிருன். எண்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/91&oldid=1326648" இலிருந்து மீள்விக்கப்பட்டது