பக்கம்:தரும தீபிகை 7.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2416 த ரும பிே கை வறுமை முதலிய இழி நிலைகளில் அழுக்தியுழல்பவருடைய பழ வினை வகைகளை இவை தொகையா வரைந்து காட்டியுள்ளன. நெஞ்சம் நிலை குலைந்து ஒருமுறை இழிக்கவர் பின்பு வரு பிறவிகள் தோறும் இழிவடைய நேர்கின்றனர். அதிலிருந்து தெளிந்து உயர்வடைய வேண்டுமாயின் நாளும் நல்ல பழக்கங் களை நன்கு பழகி எங்கும் இனியராய் ஒழுகி வர வேண்டும். முயன்று பயின்று வரும் அளவே மனிதன் உயர்ந்து வருகி முன். முயலாமலும் பயிலாமலும் கின்றுவிடின் அவன் பிறவி பழுதாப் இழித்துபடுகிறது. நல்ல மனப் பயிற்சியே எல்லா உயர்ச்சிகளுக்கும் மூலகாரணமா யுள்ளது. எவனுடைய உள் ளம் ஊக்கி உயர்ந்து வருகிறதோ அவனே நோக்கி ஆக்கங்கள் யாவும் விரைந்து வருகின்றன. கருமங்களும் சார்கின்றன. Constancy is the foundation of virtues, ... [Bacon) மனவுறுதி கருமங்களின் ஆகாரமாயுளது என்னும் இது இங்கே அறியவுரியது. மனம் நல்ல நெறிகளில் பழகிக் கருதிய கருமங்களை உறுதியா முடித் துவரின் அக்க மனிதன் அதிசய கிலைகளில் உயர்கிருன் உள்ளத்தின்படியே உலகத்தில் யாவரும் உலாவுகின்றனர். அந்தக்கரணங்கள் அற்புத யந்திரங்களா யமைந்திருக்கின்றன; அவை நலமாயின் யாவும் நன்மையாம். கூரிய அறிவுத் தெளிவும் சீரிய மனப்பண்பும் மனிதனை உன்னத நிலையில் உயர்த்தி ஒளிபெறச் செப்கின்றன. அவை ஒருமையாப் மருவிய அளவே பெருமைகள் பெருகி வரு கின்றன. நல்ல நீர்மை இலையேல் பொல்லாப் புலைகளே புகும். மனித வுருவில் மருவி வரினும் இனிய இயல்கள் இலேயேல்--இனியாத காட்டு விலங்காக் கழிவன் கடையான மாட்டு மரபே மதி. விட்டுக்கு விளக்கு ஒளிபோல் மனிதக் கூட்டுக்குள் உணர்வு ஒளிபுரிகின்றது; அது தெளிவாய் அமையவில்லையானல் அவன் வாழ்வு இளிவாகின்றது. இனிய இயல்பும் உணர்வும் கல மாப் பெருகிவரும் அளவு மடமை இருள் நீங்கி மதி ஒளிஒங்கும்.

  • = -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/107&oldid=1327068" இலிருந்து மீள்விக்கப்பட்டது