பக்கம்:தரும தீபிகை 7.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. இ. ரு ப் பு 2428 919. அரிய மனிதன் அடைய உரிய பெரிய பயனைப் பெறவே-பிரியமுறும் இவ்வுருவம் எய்தி யிருக்கின்ருய் உன் இருப்பின் செவ்வி தெரிக தெளிந்து. (க) இ-ள் அருமையான இக்க மனித உருவத்தை உரிமையோடு மருவி யிருப்பது வி ழு மி ய பயனைப் பெறவேயாம்; இவ்வுண்மை தெளிந்து சன்மையை ஒர்ந்து விரைந்து விழைந்து கொள்ளுக. அடைய அரியதை அடைக்கவன் மேல் அடைய வுரியதை விரைந்த அறிந்து கொள்ள வேண்டும். உரிமையை உணர்ந்து கடமையைச் செப்த வருபவனே கருதிய பலன்களைக் கைவரப் பெறுகிருன். மேலான கருத்துகள் எவ்வழியும் மேன்மைகளை விளேத்து வருகின்றன. எண்ணம் உயர எல்லாம் உயர்கின்றன. தன் பிறப்பின் அருமையை எண்ணிப் பெறுவதை நோக்கிய அளவுதான் அக்க மனிதனுடைய இருப்பு சிறப்படைந்து வருகி றது. எண்ணி உணராத வாழ்வு இழிந்துபடுகிறது. உள்ளம் கல்ல இயல்புகள் கோப்க்.த உயர்ந்தவரின் எல்லா மகிமைகளும் அங்கே வெள்ளமாப் விரைந்து வருகின்றன. மனம் புனித நீர்மையில் இனிது வளர்ந்தபோது அக்க மனிதன் கனி கிலையில் உயர்ந்த திகழ்கிருன் நெஞ்சமே நிலைமைகளுக் கெல்லாம் கலைமையாயுள்ளது. புறத்தில் நிகழும் செயல்கள் உளத்தின் சாயல்களே.அகம் இனியதேல் யாவும் இனிமையாம். மனமே மனிதன்; மதியே கதி என்பது முதுமொழியாப் வந்துள்ளது. மனம் பண்பு படிங் த சீரோடு முயன்றுவரின் அம்மனிதன் பெருமையடைந்து பேரோடு பெருகி வருகிருன்; மதி நெறிமுறையே கருதிவரின் நல்ல விதி விளைந்து கதிகலங்களை அருளுகிறது. மனமும் மதியும் இழிவாய் மாறுபடின் மனிதன் எவ்வழியும் கழிவாய்ச் சிறுமை அடைந்து சீரழிய நேர்கிருன். மனமே மனிதன் அதன் வழியே வாழ்வும் தாழ்வும் வளர்ந்துவரும்; தனமே தலமே தனிக்கலேயே சார்ந்த யாவும் மனம் இனிதேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/114&oldid=1327075" இலிருந்து மீள்விக்கப்பட்டது