பக்கம்:தரும தீபிகை 7.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.24 த ரும பிே ைக இனமே எல்லாம் இன்பமாய் இசைகள் பரவித் திசைஏறும; முனமே அதுதான் கீதால்ை முழுதும் பழுதாய் முடிவுறுமே. மானச நீர்மையை விளக்கி வந்துள்ள இது இங்கே கூர்ந்து நோக்கி ஒர்ந்து சிந்திக்கத்தக்கது. வெளியே தோன்றுகின்ற பெருமை சிறுமை முதலிய தோற்றங்களுக்கெல்லாம் உள்ளே மனமே மூலகாரணமாயுள்ளது. அதை ஒருவன் சல்ல வழியில் பழக்கி வந்தால் அவன் எல்லாப் பாக்கியங்களையும் எளிதே அடைந்து எவ்வழியும் திவ்விய கிலையில் உயர்ந்து கொள்கிருன். தன் அகத்தைத் தனக்கு இனிய சுகமாகப் பெற்றவன் சகத்தில் உயர்ந்து பாண்டும் மகத்துவங்கள் காணுகிருன். பெரிய மகான், அரிய ஞானி என உலகில் உயர்ந்து விளங்குப வர் எவரும் உள்ளத்தின் நன்மையாலேயே ஒளிமிகுந்து வெளி யறிய கின்றுள்ளனர். மனம் நலமாய் உயர மனிதன் மகிமை யாய் உயர்கிருன். அவன் உயர்ந்த அளவு இழிந்த புலைகள் அவனே யாதும் அனுகாமல் ஒழிந்து போகின்றன. The higher a man stands, the more the word vulgar becomes unintelligible to him. (Fuskin) மனிதன் உயர உயர இழிமொழி அவனுக்குத் தெரியாத போகிறது என்னும் இது இங்கே நன்கு அறியவுரியது. உருவத்தால் மனிதன் எனக் கோன்றிலுைம் உள்ளம் நீர் மையாய் உயர்ந்த போதுதான் அவன் சீர்மை மிகுந்த சிறந்து திகழ்கிருன். நல்ல பண்புகள் அமைந்த அளவே பிறவி பெருமை பெறுகிறது. அவை சரியாக அமையவில்லையானல் அப்பிறப்பு யாதொரு சிறப்பும் இன்றி இழிவாய் ஒழிக் த போகிறது. பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (குறள், 972) பிறப்பையும் சிறப்பையும் சேர்த்துத் தேவர் இவ்வாறு விளக்கியிருக்கிருர். அரிய செயல் பெரிய நிலையை அருளுகிறது. மக்களுக்கு இருவகை கிலைகள் வாய்ந்துள்ளன. ஒன்று பிறப்பு; மற்றது சிறப்பு. முன்னது பழவினை வசத்தால் இயற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/115&oldid=1327076" இலிருந்து மீள்விக்கப்பட்டது