பக்கம்:தரும தீபிகை 7.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. இரு ப் பு 2427 வுறுகிறது. பயனுடையது விழுமிதாப் வியனடைந்தது; பயன் இல்லது இழி மடமையாய்க் கழிவடைந்தது. மடமையா வருடம் அா அறு வாழ்வதின் மதிகூர்ந்து ஒர்ந்த கடமையைக் கருதி ஒர்நாள் கழியினும் கதிமுன் காணும்; அடவியில் புகுந்தார் எனும் அருந்தவம் புரிந்தார் ஏனும் உடலுறு பயனே ஒர்வார் உயர் கதி பரனே ஒர்வார். ஆன்ம நோக்கமான ஞானகாட்டம் ஒருகணம் காணினும் அது இனிய அமுத வாசனையாய் அரிய பரகதியை அடையச் செய்யும் ஆதலால் அதிசய பாக்கியமாக் துதி செய்ய வந்தது. மனிதனுடைய நல்ல அறிவுக்குப் பயன் தன் உயிர்க்கு பாண்டும் அல்லல் நேராமல் ஆக்கிக்கொள்வதே யாம். உண்மை தெளிந்து உய்தி புரியும் உணர்வே ஞானம் என மேன்மையா விளங்கியுளது. அதற்கு மாருண எதுவும் அஞ்ஞானம் என அவலமடைந்துள்ளது. துன்பமும் அழிவும் எ வ் வழி யு ம் தொடர்ந்துள்ள உலகப் பொருள்களை அவாவி யுழல்வது மாய மயக்கமாம்; என்றும் அழியாக இன்ப நிலையை எய்துகின்ற வரே தாய ஞானிகளாய்த் தலங்கியுள்ளனர். மெய்ப் பொருளை அறிந்தவர் பொய்ப் பொருளை இகழ்ந்து விடுகின்றனர். மருள் இருள் என மருண்டு இருண்டு நிற்கும் கிலேயிலேதான் துயரப் பிறவி நிலையாய்த் தொடர்ந்து கொள் கிறது. உண்மை உணர்வு ஒழியவே புன்மை புகுந்துகொண்டது. பொருளல் லவற்றைப் பொருள் என் லுணரும் மருளானம் மானப் பிறப்பு. (குறள்; 551) யாதும் நிலையில்லாத பு லை ய ர ன உலகப் பொருள்களை உண்மை என்று கம்பி உழலும் மாய மயக்கத்தாலேயே தீய பிறப்புகள் தோன்றியுள்ளன என்று தேவர் இங்வனம் தெளித் துள்ளார். தத்துவ நிலைகளை உப்த்துணர்ந்து உத்தம விவேகியாப் உய்தி பெறவேண்டும் என்பது ஈண்டு உணர வந்தது. சகம் என உடலம் என்னத் தகுகர னங்கள் என்ன அகம்என இதம தென்ன அழிவில்போ கங்கள் என்ன வகைபட உயிர்கட்கு ஆதல் மாயை அம் மாயைநீக்கிப் புகலரு முத்தி சேரும் அவர்கள் புண்ணியத்தி னேரே. (பரிபூரணசித்தி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/118&oldid=1327079" இலிருந்து மீள்விக்கப்பட்டது