பக்கம்:தரும தீபிகை 7.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2428 த ரும பிே கை அவல கிலேகளை உணர்த்து தெளிந்து ஆன்ம ஞானத்தால் விடுதலை பெறுபவரே மேலான பு: ண் ணி ய லேர் என இது விளக்கியுளது. மெய்யறிவு மனிதனுக்கு உப்தி தருகிறது; பொய்யறிவு புலேகளில் ஆழ்த்துகிறது. The wise man alone is free, and every fool is a slave. (Stoic). ஞானி ஒருவனே விடுதலை பெற்றுத் தலைவனப் கிற்கிருன்; மற்ற மூடர் எல்லாரும் அடிமைகளாகவே அல்லல்களில் வாழு கின்றனர் என்னும் இது இங்கே உள்ளம் தெளிய வுரியது. நல்ல அறிவுக்கும் பொல்லாத மடமைக்கும் உள்ள வேற்று மையை ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். தன் வாழ்நாளைப் பாழாக்காமல் உயிர்க்கு உயர்ந்த பயனை அடைந்து கொள்ப 'வனே சிறந்த ஞானி ஆகிருன்; அருமையாய் அமைந்த நாளைப் பழுதுபடுத்துபவன் இழுதையாய் இழிந்து கழிந்து ஒழிகிருன். உனக்கு அமைக்க ஆயுளே இனிமை செய்து உயர் பயனுறுக. வாழ்நாட்கு அலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅது எழுதலால்-வாழ்நாள் உலவா.முன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும் கில வார் கிலமிசை மேல்" (நாலடி, 22) இறப்பு நேருமுன் உயிர்க்கு உறுதி பெறும்படி உணர்த்தியுளது. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. மனிதனது இருப்பு இறப்பை நோக்கியுள்ளது. சாவு நேருமுன் தக்க பயனே அடைய வேண்டும். வாழ்வை விளுக் கழிக்க லாகாது. உயிர்க்கு உறுதி பெறுவதே உயர் வாழ்வாம். அவ்வாறு பெருவழி அது பெரிய பிழையாம். இழி வாழ்வு பழி துயராம். பயன் இழக்கது பாழ் படிக்கது. பாழாகாமல் வாழ்வை உயர்த்துக. பிறவிகலம் தெரிவது பெரிய பேரும். உறுவதை உணர்ந்து உப்தி பெறுக. கூஉ-வது இருப்பு முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/119&oldid=1327080" இலிருந்து மீள்விக்கப்பட்டது