பக்கம்:தரும தீபிகை 7.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 இ ற ப் பு 2439 நல்ல ஒழுக்கம் ஆன தருமத்தில் கட, தீய வழியில் நடவா தே; தருமநெறி கடந்தவன் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் இன்பமே பெறுகிருன் என்னும் இது இங்கே அறிய வுரியது. நல்ல கருமங்களைச் செய்துவருகிற தருமவான் மறுமையில் பெரிய சுகங்களையும் அரிய'மகிமைகளையும் அடை. க் துள்ள மையால் மரணத்துக்கு அவன் அஞ்சுவதில்லை; அதனை உவந்து எதிர் நோக்கி நிற்கிருன். பொல்லாத பாவங்களைச் செய்தவன் கொடிய அல்லல்களை அடைய நேர்ந்திருத்தலால் சாவு நேரும் போது ஆவி அலமந்து அவன் அஞ்சி நடுங்குகிருன். “The bad man's death is horror; but the just does but ascend to glory from the dust.” [Habbington] கெட்ட மனிதனுடைய சாவு கொடிய பயங்கரமாயிருக் கிறது; நல்ல நீதிமானுடைய மரணம் இழிவிலிருந்து நீக்கி உயர்ந்த மகிமையை அவனுக்கு அருளுகிறது என்னும் இது இங்கே ஊன்றி உணர வுரியது. அல்வழியில் இழியாமல் நல்ல நெறிகளில் ஒழுகி உயர்க. 92.4. சூத்திரம் கின்றவுடன் தோல்பாவை வீழ்வதுபோல் ஆத்திர மாணவினை அற்றவுடன்-காத்திரம் மண்ணில் விழுந்துவிடும் மாயமா வாழ்விதனை எண்ணிச் செருக்கல் இடர். (*) இ-ள். ஆட்டும் கயிறு கின்றவுடன் ஆடிவந்த தோல்பாவைகள் வீழ்ந்து விடும்; அதுபோல் வினைத்தொடர்பு அற்றவுடன் உடல் கள் மண்ணில் மாய்ந்து விழும்; இத்தகைய மாய வாழ்வை நிலை என்று எண்ணிக் களித்தல் கொலையாக துன்பமாம் என்க. சூத்திரம்= இரகசியமா யிணைந்திருக்கும் கயிறு. ஆத்திரம்=ஆசை மீதார்க்க அவசரம். காத்திரம்= கரணங்கள் மருவிய உடல். வினைகளின் விக்ளவாகவே பிறவிகள் விளைந்து வந்துள்ளன. அவற்றின் போகங்களை அனுபவித்து முடிந்தவுடன் உயிர்கள் நீ ங் கி ப் போகின்றன; போகவே தேகங்கள் செயலிழந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/130&oldid=1327091" இலிருந்து மீள்விக்கப்பட்டது