பக்கம்:தரும தீபிகை 7.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2440 த ரும தி பி ைக கிடக்கின்றன. அந்தக் கிடைதான் இறப்பு, சாவு இழவு, மரணம், முடிவு என்று பல பெயர்களால் சொல்லப் படுகிறது. கயிறு அறுக்கவுடன் பாவைகள் செயல் இழந்து விழுந்து விடுகின்றன; உயிர் பிரித்தவுடன் உ - ல் க ள் அடலழிக் து படுகின்றன. கோலால் செய்த பாவைகள் ஆட்டம் ஒப்க்க கிடப்பதுபோல் ஆவி நீங்கிய தேகங்களும் அவலமா யிழிந்து கிடக்கின்றன. காக்கையும் கழுகும் காயும் கரியும் பேயும் தின் லும் இரை என்று யாக்கைகள் இழிவாப் பேசப்பட்டுள்ளன. ஒன்பதுவாய்த் தோல்பைக்கு ஒருநாளேப் போலவே அன்புவைத்து நெஞ்சே அலேந்தாயே--வன்கழுக்கள் தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்புட்டுக் கத்திக்குத் தித்தின்னக் கண்டு. (பட்டினத்தார்) கழுகுகளுக்கு இரை யாயுள்ள ஒன்பது துளைகளையுடைய தோல்பை எனப் பட்டினக்கார் இங்ங்னம் உடம்பைச் சுட்டி இகழ்ந்திருக்கிரு.ர். உடல் பினமாய் விழுமுன் உயிர்க்கு உறுதி நலனத் தேடிக் கொள்ள வேண்டும் என்றே பலரும் பாடியிருக் கின்றனர். காயம் மாயப் பொப் எனக் கவிகள் காட்டியுள்ளன. தோற்போர்வை மேலும் துளேபலவாய்ப் பொய்மறைக்கும் மீப்போர்வை மாட்சித் துடம்பால்ை-மீப்போர்வை பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனே ப் பைம்மறியாப் பார்க்கப் படும். (காலடியார்) பல துவாரங்களுடைய கோல் போர்வையால் மூடியுள்ள உடம்பின் உண்மை நிலையை நாடியுனர்க் து உயிர்க்கு உறுதியை விரைந்து கேடுக என இது வரைந்து உணர்த்தியுள்ளது. ஆன்ம ஊதியம் அதிசய மேன்மையாய்த் துதி செய்ய கின்றது. உயர்ந்த பிறவிப் பயன் என மேலோர் புகழ்ந்த போற் ஆறுவது உயிர் சிறந்த கதியில் ஏற்றமாப் விளங்கி நிற்பதையே. நேர்ந்த பிறப்பில் உயிர்க்கு நிலையான தலைமையை அடைந்து கொண்டவன் கித்திய முத்தன் என நிலவி நிற்கிருன். பிறப்பின் பயனைச் சிறப்பாகப் பெற்றவன் இறப்பை உவப்பா எதிர் நோக்கி இராசகம்பீரமாப் இனித வாழுகின்றன். ஆவிக்கு ஆன இனிய பலனை அடைந்தவன் அரிய ஞான விசன் ஆகின் முன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/131&oldid=1327092" இலிருந்து மீள்விக்கப்பட்டது