பக்கம்:தரும தீபிகை 7.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2442 த ரும தி பி கை உற்றபின்போ விழ்வது என கிலேயின்றேல் இதன்பெருமை உரைப்பது என்னே! (திே நூல்) மனித வாழ்வின் நிலையை இவை இனிது காட்டியுள்ளன. காட்சிகளைக் கருதி உ ண ர் ங் து இறுதி நேருமுன் உயிர்க்கு உரிமையான உறுதி நலங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். உயிர்வாழ்வு உயிர்ப்பு அளவில் உலாவி வருகிறது. புறத்தே ண்ேடமூச்சு அகத்தே மீண்டு வருவதே ஈண்டு வாழ்வாயுள்ளது. வெளியே போனது உள்ளே மீளாது ஒழியின் அதுவே அ பூமி வாம். அந்த இறப்பு நிலையைக் குறிப்போடு கூர்ந்த ஒர்க் து பிறப்பின் பயனைச் சிறப்பாக விரைந்து செய்து கொள்ளுக. 925. வழிவழியாய் மன்பதை வையமிசை என்றும் ஒழிவின்றி ஓங்கி வளரக்-கழிவாகி மூத்து வருந்தும் முதுமை களேந்துறவாய்க் காத்து வருமிறப்பு காண். (டு) இ-ள். மாந்தர் வழிமுறையே தொடர்ந்து இவ்வையத்தில் புதிது புதிதாய் ஒங்கி வளர்ந்து வரும்படி மூத்து முதிர்ந்த கிழங்களைக் கழித்து நீக்கி இறப்பு யாண்டும் இனிது காத்துவருகிறது என்க. இந்த உலகம் உயிரினங்களின் தொடர்பால் ஒளி மிகுந்து தெளிவமைந்து வளம் அடைந்து வருகின்றது. சீவகோடிகள் தோன்ற வில்லையானுல் நெடிய பூமி கொடிய பாலைவனமா யிழிந்து பாழடைந்து படும். கடல்கள் சூழ்ந்த ஞாலம் உடல்கள் சூழ்ந்து வருவதால் உயர்ந்த ஓங்கி மிளிர்கிறது. பிறந்த பிராணி களும் பருவம் முதிர்ந்து இறந்து போ கவில்லையானல் உருவங் கள் செறிந்து நிறைந்து வையம் வெப்யதாய் கைய நேரும். பழுத்த பழங்கள் உதிர்க் து வீழ்வதுபோல் மூப்பு முதிர்க்க கிழங்கள் இயல்பாப் இறக்துபடுகின்றன. இந்த இறப்பினலே யே உலகம் சிறப்படைந்து சீரோடு செழித்து வருகிறது. விளைந்து முதிர்ந்த பயிர்கள் அழிந்து போகின்றன; போகவே மீளவும் இளம் பயிர்கள் கிளர்ந்து வளர்ந்து வருகின்றன. தளர்ந்து மூத்த கிழங்களே உலகிலிருந்து ஒருங்கே ஒழித்து நீக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/133&oldid=1327094" இலிருந்து மீள்விக்கப்பட்டது