பக்கம்:தரும தீபிகை 7.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. இ ற ப் பு 2443 கிலத்தை நலமாப் பாதுகாத்து வருதலால் இறப்பு வையத்தை வளமாப் போற்றி வரும் உரிமையாளனுப்ப் பெருமை மிகப் பெற்று ஊழி முதல்வன் என ஒளி மிகுந்து உறுதி புரிந்துள்ளது. கூற்றுவன், எமன், காலன் என மேலான பெயர்களால் ஞாலம் போற்றி வருவன யாவும் இறப்பின் மாற்று உருவங் களே. உருவக உரைகள் கால தேவதைகளைக் காட்டியுள்ளன. காலன் வாய்ப்படு முன்னரே காலகாலனைக் கருதி உப்ய வேண்டும் என்பது மேலோர் வாய்மொழி. பிறவிக் கடலுள் வீழ்ந்து வாழ்ந்து வருதலால் ஊனுடம்புடைய மானுடங்கள் மீனினங்கள் என நேர்ந்தன. அந்த மீன்களை வளைத்துப் பிடித்து வாரி வருகிற வகையால் கருங்காலன் செம்படவன் என நேர்ந் தான். அவன் கையில் அகப்படாதவன் சிவன் காலைச்சேர்கிருன். கடற்று எனப் பெயரிய கொடுங்தொழில் நுளேயன் ஊற்றமில் யாக்கை உவர்நீர்க் கேணிப் புலத்தலை உயிர்மீன் அலைத்தனன் பிடிப்ப ஐவளி பித்துஎன அமைத்துவைத் திருந்த முத்தலேத் துாண்டில் தூண்டி அத்தலே வாழ்நாள் மிகப்பு நோக்கித் தாழாது அயிறலைத் தொடங்கி எயிறு அலைத் திருத்தலின் தள்ளா முயற்சி தவறுபட்டு ஒழிக்கென வெள்குறீஇ மற்றவன் விம்மிதன் ஆக அருட்பெருங் கடலின்.அவ் ஆருயிர் மீனம் கருக்குழி கழியப் பாய்ந்து தெரிப்பரும் பாமா னங்தத் திரையொடும் உலாவி எய்தரும் பெருமிதம் எய்த ஐயகின் கடைக்கண் அருளுதி எனவே. (திருவாரூர்கான்மணி, 13) ஒரு துளையன் வலையில் பல மீன்கள் அகப்பட்டன; அவற் மறுள் ஒன்று அதிசயமாய்த் துள்ளிக் குதித்து அயலேயிருந்த நல்ல நீரில் பாய்ந்து மறைந்தது; அதுபோல் எமன் கையில் சிக்கியுள்ள உயிரினங்களுள் நான் ஒருவன் தப்பிப் பிழைத்து உன் திருவடியாகிய பேரின்பக் கடலில் புகுந்து வாழும்படி எனக்கு அருள் புரிய வேண்டும் இறைவனே! என்று சிவபெரு மானே நோக்கிக் குமரகுருபரர் இவ்வாறு துதித்திருக்கிருர். கவி யில் சுரந்துள்ள பொருள்களையும் உருவக நிலைகளையும் அறிவின் சுவைகளையும் ஊன்றி ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/134&oldid=1327095" இலிருந்து மீள்விக்கப்பட்டது