பக்கம்:தரும தீபிகை 7.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2444 த ரும பிே கை எண் இறந்த பிராணிகள் மண் நிறைந்து கிரிகின்றன. அவற்றுள் மனித இனம் மதிநலமுடையதாப் மருவி வந்துள்ளது. பிறந்தன யாவும் இறந்து போய்விடும் என்று உணர்ந்து கொள் வதில் மனிதன் உயர்ந்து நிற்கின்றன். நூலறிவாலும் அனுபவ உணர்வாலும் அழிவு நிலையைத் தெளிவாகத் தெரிந்துள்ளமை யால் விழுமிய பிறவிப் பயனை வி ை ந் து பெறுவது சிறந்த உரிமையா நேர்ந்தது. கண்ட காட்சி கதிகாட்டி யருளுகிறது. கொண்ட பாவனே பிறவியாம் பூதங்கள் குலேந்துபோம்; திசைகோன்ரு: கண்ட தேசங்கள் பிறசொலாத் கிரிக்கிடும் கனகிரி துகள் ஆகும்; உண்டெனும் தன்மை விழுங்கிட உலகு போம்; உம்பர்போம்; புவனம் போம்: மண்டு வாரிபோம்; உடுக்கள்போம்; தானவர் வானவர் கணம் போகும். (1) சித்தர் பொன்றுவர்; துருவனும் சிதைகுவன்; சிவன் அயன் திருமார்பன் தத்து வந்தனில் ஒன்றுவர்; காலமும் தருமமும் முடிவாகும்; மத்த வானும்போம்; மயக்கமே தருவதாய் வாக்கொடு செவிக்கு எட்டாச் சுத்த மாம்பொருள் ஒன்றில்ை இகழ்வுறத் தொல்லுலகு இழிவாகும். (வாசிட்டம்) (2) யாவும் இறந்துபடும் இழவு நிலைகளை இங்கே விழி யூன்றி வியந்து காணுகிருேம். சாவிலேயே இவ்வாறு வாழநேர்ந்துள்ள மையால் சாகுமுன் ஆக வேண்டியதை மனிதன் அ ைட ய நேர்கின்ருன். அடையாவழிக் கடையா யிழிகிருன். நீதி நெறியான வாழ்வு தேவ கிதியாய் வருகிறது. எவனு டைய வாழ்வு தாய்மை தோய்ந்து தொடர்கிறதோ அது தேவ வாழ்வாய்ச் சேமம் அடைந்து கேசு மிகுந்து திகழ்கிறது. The creed of the true saint is to make the most of life, and to make the best of it. (E. H. Chapin) உண்மையான மகான் வழி உயிர்வாழ்வை மிகுதியும் சன்மை ஆக்கியருள்கிறது என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/135&oldid=1327096" இலிருந்து மீள்விக்கப்பட்டது