பக்கம்:தரும தீபிகை 7.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93. இ ற ப் பு 2445 சித்த சுத்தியான வாழ்வு கித்திய முத்தியை நேரே தருகிறது; அவ்வாறு வாழ்பவனேப் புக்கேளுலகமும் போற்றி வருகிறது. பெற்ற பிறப்பின் பேற்றைச் சிறப்பா அடைந்தவனுக்கு உற்ற இறப்பு எவ்வழியும் செவ்வையாப் உவகையே புரிகிறது. Death is the golden key that opens the palace of eternity. (Milton) என்றும் அழியாத பேரின்ப வுலகைத் திறக்கிற தங்கத் திறவு கோலாப்ச் சாவு மேவியுளது என மில்ட்டன் என்னும் ஆங்கிலக்கவிஞர் இறப்பைக்குறித்து இங்கனம் கூறியிருக்கிரு.ர். கித்திய நிலை முத்தி என கின்றது. புனித வாழ்வுடையவர் அந்த அரிய இனிய பரகதியை எளிதே உரிமையா அடைகின்ருர், 926. செத்தொழிவம் என்னும் சிறுங்கனவொன் றில்லை.எனின் முத்தி கிலேயை முதல்விழைந்து-இத்தரையில் யாரே அருள்செய் தறம்புரிவார் அம்மைஎனும் பேரேனும் உண்டோ பிற. (சு) இ-ள். இறந்து தொலைவோம் என்னும் இந்தச் சிறிய நினைவு ஒன்று இல்லை. ஆனல் அரிய தருமங்களே யாரும் செய்யார்; அழியாத பேரின்ப நிலையைப் பெற எவரும் விரும்பார்; மறுமை என்ற பேரே மறைந்து போம்; இந்த உண்மையை உணர்ந்து கொள்க. முயற்சிகளைச் செய்து உயர்ச்சியாய் வாழும்படி பசி உயிர் களை இயக்கி வருகிறது; அதுபோல் இறப்பும் மனிதர்க்குச் சிறப்பான உணர்ச்சிகளை உதவியருளுகிறது. காரண காரியத் தொடர்புகள் கருமங்களின் மருமங்களாப் மருவியுள்ளன. உள்ளம் தெளிந்து சீவர்கள் உயர்கதிகளை அடையச் சாவு உறுதி யா மேவி யிருப்பது வித்தக விநோதமாப் விளங்கி நிற்கிறது. பொய்யான புலைகளை அறிந்த அளவு மெய்யான நிலைகளை அடைய சேர்கின்ருன். இறக்து போவோம் என்ற எ ண்ணமே பிறந்த பயனை விரைந்து பெறச் செய்கிறது. உணர்வு நலம் கனிக்க சிந்தனைகள் உயர்ந்த பலன்களே உரிமையோடு உதவு கின்றமையால் அவை சீவ ஒளிகளாப் வியந்து புகழ வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/136&oldid=1327097" இலிருந்து மீள்விக்கப்பட்டது