பக்கம்:தரும தீபிகை 7.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2446 த ரும தீபிகை மனிதப் பிறப்பு மதிநலம் உடையது ஆதலால் கித்திய அகித்தியங்களை நேரே உய்த்து உணர்ந்து நெறிமுறையே கடமை களேச் செய்துவருகிறது. அறிவோடு நல்ல வழியே ஒழுகி வருக லால் அரிய பல மேன்மைகள். அதனிடம் பெருகி வருகின்றன. எய்திய பிறவியால் செப்து கொள்வதைத் தெரிந்தவன் சிறந்த கிலையில் உயர்ந்து சீர்மையோடு விரைந்து உய்தி பெறுகிருன். எடுத்த தேகம் விழுமுன் எதிரிலே மடுத்த யாவும் மதியுடன் ஆற்றின்ை அடுத்த தேவப் பிறவியை ஆக்கினன் தொடுத்த மேன்மை தொடர்ந்து தொடருமே. தெளிந்த விவேகத்தோடு கருமங்களைச் செய்வதால் விளைந்து வரும் பலன்களை இது நன்கு விளக்கியுள்ளது. கருத்தோடு முயன்ற வாழ்கின்றவனே விருத்தி யடைந்து வியன விளங்கி வருகிருன். கருதி யுணராக மனிதன் விருதாவா இழிந்து பரிதாப நிலைகளில் அழுக்தி யுழந்து விணே கழிந்து போகிருன். A man without a purpose is soon down at zero. [Carlyle] குறிக்கோள் இல்லாத மனிதன் பாழான கீழ் நிலையில் விரைந்து விழ்கிருன் என்னும் இது ஈண்டு ஊன்றி உணர்ந்து கொள்ள வுரியது. சரியான குறி இலையேல் வாழ்வு வெறியாம். கூரிய அறிவும் சீரிய கருத்தும் சிறந்த குறிக்கோளும் வாழ்வை மகிமைப்படுத்தி வருகின்றன. சாவை நோக்கியே வாழ்வு கடந்து வருதலால் அந்த அழிவு நிலையை முன்னதாக எண்ணி உணர்பவர் தெளிவான விவேகிகளாய்ச் சிறந்து திகழ் கின்ருர். உயிர்க்கு விழுமிய நன்மையை நாடுபவர் உடலின் அழிவை உணர்ந்து கொள்ளுகின்ருர். தாம் தெளிந்து கொண்ட உண்மையை உலகம் தெளிய அளியோடு உணர்த்துகின்ருர். குடம்பை தனித்தொழியப் புட்பறக் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு. (குறள், 538) கூட்டை விட்டுப் பறவை பறந்து போகல்போல் உடம்பை விட்டு உயிர் பிரிந்து போம் எனத் தேவர் இவ்வாறு சாவை உணர்த்தியுள்ளார். பிரிவு நேருமுன் பெற வுரிய பேறு பெறுக. பொத்தை யூன்சுவர் புழுப்பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய்க்கடரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/137&oldid=1327098" இலிருந்து மீள்விக்கப்பட்டது