பக்கம்:தரும தீபிகை 7.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. இ ற ப் பு 2449 அளவு மனிதன் ஞானியாய் உயர்ந்து திகழ்கின்ருன். ஐயோ! சாவு வந்துவிட்டதே என்று நெஞ்சம் திகிலாப் அஞ்சி நடுங்காத படி முன் எச்சரிக்கையாய்த் தருமநெறி கழுவித் தகவோடு வாழ்ந்துவரின் மரணபயம் நீங்கின ங்கும்மகிமை மிகப்பெறலாம். 937. கரணங்கள் யாவும் கலங்கக் கடுகி மரணம் வருவ தறிந்தும்-அரணமொன்றும் தேடாமல் வீணே திரிந்து கழிவார்போல் மூடர் எவரே முதல். - (எ) இ-ள். அந்தக் கரணங்கள் யாவும் க ல ங் கி கடுங்கும்படியான மரணம் வருவதை அறிந்தும் தம் உயிர்க்கு யாதொரு உறுதி நலனையும் கருதிக் கொள்ளாமல் வீணே திரிந்து கழிவார் போல் முழுமூடர் வேறு யாரும் யாண்டும் இலர் என்பதாம். பிறவிப் பயனைப் பெறுபவன் பெரிய மகான் ஆகிருன்; பெருதவன் பேதையாய் இழிவுறுகிருன். உற்ற உடம்பின் உயர்வையும், உரிய வாழ்வின் குறிக்கோளையும், சாவின் துயரை யும், செத்தபின் நேரும் அல்லல்களையும் உய்த்து உணராமை யால் ஊனமாயிழிந்து மானிடர் ஒழிக்க :ோகின்ருர். துயரப் பிறப்பையும் துன்ப வாழ்வையும் இன்பமா எண்ணி இறுமாந்து களித்து ஈனமா அழிந்து போவதே சிறுமாந்தரின் செயலாப் மயலோடி நிற்கிறது. வந்த காரியத்தை உணராமல் வாளா மாண்டு கழிவதே மீளாக மாய மோகமாய் யாண்டும் நீண்டு வருதலால் மனிதருடைய நிலைகள் மையல் வெறிகளா மருவின. பிறப்பும் இறப்பும் துயரங்களோடு தொடர்ந்து வந்துள்ளன. பெற்ற தாய்க்குப் பிரசவ வேதனையை விளைத்துப் பெரிய அல்லல் களுடன் குழந்தை பிறக்கிறது. வாழ்விலும் எல்லையில்லாத துன் பங்களை எய்தி யுழலுகின்றது; சாவிலும் கருவி கரணங்கள் எல் லாம் கலங்கி கடுங்க மயங்கி முடிகிறது. உடலை எடுத்து வந்த போதும் அதனை விடுத்து ஒடும்போதும் துக்கங்களே பக்கம் எங்கும் தொடர்ந்திருக்கலால் பிறப்பும் இருப்பும் இறப்பும் கொடிய துன்பங்கள் என முடிவாய் அஞ்ச நேர்ந்தன. ՅՈ7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/140&oldid=1327101" இலிருந்து மீள்விக்கப்பட்டது