பக்கம்:தரும தீபிகை 7.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93. இ ற ப் பு 2453 அவளுக்கு ஒரே ஒரு மகன்; குசலன எனனும் பேரினன்; ஒரு நாள் இறந்து போனன்; அத்தாப் கதறி அழுதாள்; அன்று அவ்வூர் அருகே ஒரு சோலையில் புத்தர் வந்து தங்கியிருப்பதைக் கேள்வியுற்று அவரிடம் விரைந்து போப் இறந்த தன் மகனே எழுப்பியருள வேண்டும் என்று பரிந்து புலம்பினள். கருணை வள்ளலான அவர் அவளது பரிதாப நிலையை அறிந்து உள்ளம் உருகினர்; செத்தவனைப் பிழைப்பிக்க முடியாது என்று நேரே சொன்னல் அவள் துயரமாய்ச் சாவாள் என்று இரங்கி வித்தக விநயமா ஒர் இதமொழி கூறினர். அம்மா! இவ்வூரில் யார் விட்டிலேனும் கொஞ்சம் வெண்கடுகு வாங்கி வா; அது வங் கால் உன் மகன் பிழைத்து வருவான்' என்ருர். இதோ சான் வாங்கிவருகிறேன் என்று அவள் வேகமாய்ப் போகநேர்ந்தாள்; அவளை மறுபடியும் அழைத்து “யாரும் சாகாத வீட்டில் அதை வாங்கி வா!' என்று பாங்கோடு பகர்ந்து அனுப்பினர். அவள் அ வ்வாறே விடு வீடாகப் போய்க் கேட்டாள்; சாகாத விடு யாண்டும் யாதும் இல்லை ஆதலால் வெறுங்கையோடு அவள் மீண்டு வந்தாள். அதன்பின் இறப்பின் உண்மையை உணர்ந்து உள்ளம் தெளிந்து பிறப்பைப் புனிதமாக்க நேர்ந்தாள். புத்த ரைக் குருதேவராகத் துதித்துத் துறவியாப்அரியதவம்புரிந்தாள். இறந்தமகன் எழுந்துவர வேண்டும்எனின் இவ்வுலகில் இறவா இல்லில் கிறந்திகழும் வெண்கடுகு சிேறிது வாங்கிவர வேண்டும் என்ருர்; பறந்தவளும் இடங்கள்தொறும் போய் எங்கும் வினவினுள் பாரில் யாண்டும் பிறந்தவர்கள் எல்லாரும் இறந்தவரே எனத்தெளிந்து பெயர்ந்து வந்தாள். தனது அருமை மகன் இறந்து போனமையால் இறப்பு நிலையைத் தெளிந்து பிறப்பின் பயனே அவள் பெற விரைந்தாள். காவிரிப்பூம்பட்டினத்தில் கோதமி என்று ஒரு பார்ப்பனி இருந்தாள். அவளுடைய மகன் சார்ங்கலன் என்னும் பேரினன்; இளைஞன், ஒரு நாள் மாலையில் அவ்வூர் அயலே யிருந்த பெரிய மயானச்சாலைக்குப் போனன். கழிந்த வெள் எலும்புகளையும் வெண் தலைகளையும் கண்டான்; நெஞ்சம் கலங்கின்ை; அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/144&oldid=1327105" இலிருந்து மீள்விக்கப்பட்டது